அளவுக்கு மீறிய இனப்பெருக்க திறன்; ஆயுளை குறைக்கும் - ஆய்வில் ஷாக் தகவல்!
இனப்பெருக்கம் குறித்த முக்கிய தகவல்கள் ஆய்வின் மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இனப்பெருக்கம்
இங்கிலாந்து உயிரியியல் வங்கியில் ஆராய்ச்சி தேவைக்காக பலர் தங்களுடைய மரபணுக்களை சேமித்து வைத்துள்ளனர். அதில், சுமார் 3 லட்சம் பேரின் மரபணுக்களை ஆய்வு செய்யப்பட்டது.
அதன்படி, கடந்த 1940 முதல் 1969 ஆண்டு வரையிலான தலைமுறைகளிடம், இந்த இனப்பெருக்க தன்மையை ஊக்கப்படுத்தும், மரபணு தொடர்களில் காணப்படும் வேற்றுமைகள் அதிகரித்து காணப்படுகின்றன. ஒரு குறிப்பிட்ட மரபணு மாதிரியானது, ஒரு பெண்ணின் கர்ப்பம் தரிக்கும் தன்மையை மேம்படுத்துகிறது.
அதனால், அவர் இரட்டை குழந்தைகளை பெற்றெடுக்கிறார். அவர், ஒரு குழந்தையை பெற்றெடுக்க கூடிய பெண்ணை விட, அதிக ஆற்றலுடன் நிறைய குழந்தைகளை பெற கூடியவராகிறார்.
வாழ்நள் குறைய வாய்ப்பு?
ஆனால், இரட்டை குழந்தைகளை பெற்றெடுக்கும்போது, பயன்பாட்டால் ஏற்படக்கூடிய சேதங்கள் உடலில் விரைவில் அதிகரிக்க வழிவகுக்கும் வரலாற்றில் முன்பு இல்லாத வகையில், மனிதர்கள் அதிக காலம் வாழ்கின்றனர். அதற்கு, மரபணு சார்ந்த பரிணாம வளர்ச்சியை விட சிறந்த சுகாதார நலனே அடிப்படையான காரணம் என்றும் முன்வைக்கப்படுகின்றன.
இனப்பெருக்க தன்மையை ஊக்கப்படுத்தும் மரபணு தொடர்களில் காணப்படும் வேற்றுமைகளை சுமந்து கொண்டிருக்கும் மக்கள் 76 வயதில் உயிரிழக்க கூடும்.
இதன்மூலம், இனப்பெருக்க திறனை ஊக்குவிக்க செய்யும் மரபணு பிறழ்வுகள், வாழ்நாளை குறைக்க கூடும் என அமெரிக்காவின் மிச்சிகன் பல்கலைக்கழகத்தின் பேராசிரியரான ஜியான்ஜி ஜாங் தெரிவித்துள்ளார்.