Friday, Jul 18, 2025

வழக்கு நிலுவையில் இருக்கிறது; பொதுச்செயலாளர் என்று எப்படி சொல்வது? எடப்பாடிக்கு குட்டு வைத்த நீதிமன்றம்!

Tamil nadu Edappadi K. Palaniswami Madras High Court
By Sumathi a year ago
Report

வழக்கு நிலுவையில் உள்ள நிலையில் பொதுச்செயலாளர் என்று எப்படி குறிப்பிட முடியும் என எடப்பாடியிடம் உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

எடப்பாடி மனு

அதிமுக பொதுச்செயலாளராக கே.பழனிசாமி அறிவிக்கப்பட்டதை எதிர்த்தும், பொதுக்குழு தீர்மானங்களை எதிர்த்தும் ஓ.பன்னீர் செல்வம், மனோஜ் பாண்டியன், வைத்திலிங்கம், ஜே.சி.டி.பிராபகர் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

வழக்கு நிலுவையில் இருக்கிறது; பொதுச்செயலாளர் என்று எப்படி சொல்வது? எடப்பாடிக்கு குட்டு வைத்த நீதிமன்றம்! | High Court Slams Edappadi Palanysamy

இந்த மனுக்கள் நீதிபதி சி.வி.கார்த்திகேயன் முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர்கள் தரப்பில் வழக்கறிஞர்கள் ராஜலட்சுமி, இளம்பாரதி ஆகியோர் ஆஜராகி, “சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுச்செயலாளர் நியமனம் தொடர்பான வழக்கு நிலுவையில் உள்ளது.

கட்சி நிர்வாகிகளுக்கு விசுவாசமே இல்லை - கட்சி கூட்டத்தில் வெளிப்படையாக இபிஎஸ் அதிருப்தி

கட்சி நிர்வாகிகளுக்கு விசுவாசமே இல்லை - கட்சி கூட்டத்தில் வெளிப்படையாக இபிஎஸ் அதிருப்தி

நீதிமன்றம் கேள்வி

அந்த வழக்கில் பழனிசாமி தன்னை இணை ஒருங்கிணைப்பாளர் என மனுதாக்கல் செய்துவிட்டு, தற்போது அதிமுக பொதுச்செயலாளர் எனக்கூறி பதில்மனு தாக்கல் செய்துள்ளார்” என புகார் தெரிவித்துள்ளனர். இதற்கு பதிலளித்த நீதிபதி, அதிமுக பொதுச்செயலாளர் தொடர்பான வழக்கு நிலுவையில் உள்ள நிலையில்,

high court

அக்கட்சியின் பொதுச்செயலாளர் என குறிப்பிட்டு எப்படி மனுதாக்கல் செய்ய முடியும்? என கேள்வி எழுப்பினார். மேலும், இந்த மனுவை எப்படி பதிவுத் துறை ஏற்றுக்கொண்டது? திருத்தப்பட்ட மனுவை தாக்கல் செய்ய பழனிசாமி தரப்புக்கு உத்தரவிட்டு, விசாரணையை ஆகஸ்ட் 7-ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.