பாடலுக்கு பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னாவது? இளையராஜாவுக்கு நீதிமன்றம் கேள்வி!

Ilayaraaja Madras High Court
By Swetha Apr 24, 2024 11:10 AM GMT
Report

பாடலுக்கு பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னாவது என்று இளையராஜாவிதம் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

இளையராஜா

இந்திய சினிமாவின் முன்னணி இசையமைப்பாளர் இளையராஜாவின் 4 ஆயிரத்து 500 பாடல்களை, எக்கோ மற்றும் அகி உள்ளிட்ட இசை நிறுவனங்கள் ஒப்பந்த காலம் முடிந்த பிறகும் காப்புரிமை பெறாமல் பயன்படுத்தியதாகவும்

பாடலுக்கு பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னாவது? இளையராஜாவுக்கு நீதிமன்றம் கேள்வி! | High Court Questions About Illayarajas Case

இதற்கு கண்டனம் தெரிவித்து இந்த பயன்பாட்டிற்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் இளையராஜா வழக்கு தொடுத்திருந்தார். அவ்வழக்கில் நீதிமன்றம் தயாரிப்பாளர்களிடம் உரிமையை பெற்று இளையராஜாவின் பாடல்களை பயன்படுத்த இசை நிறுவனங்களுக்கும் உரிமை உள்ளது என உத்தரவிட்டது.

நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பை எதிர்த்து இளையராஜா சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கின் விசாரணையில், தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவின் மீது இடைக்கால தடை விதிக்கப்ட்டது. இந்த உத்தரவை எதிர்த்து எக்கோ நிறுவனம் சார்பில் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

நீங்கள் எல்லோருக்கும் மேலானவரா? இளையராஜாவிற்கு நீதிமன்ற சரமாரி கேள்வி

நீங்கள் எல்லோருக்கும் மேலானவரா? இளையராஜாவிற்கு நீதிமன்ற சரமாரி கேள்வி

நீதிமன்றம் கேள்வி

இதனை தொடர்ந்து இளையராஜா தரப்பில் எல்லோருக்கும் மேலானவன் என்றது பாடல்களின் காப்புரிமை விவகாரத்தில் மட்டுமே என்றும் மற்றபடி அவர் தன்னை அப்படி கூறிக்கொண்டது இல்லை என வாதிட்டார். வழக்கு 24-ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.

பாடலுக்கு பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னாவது? இளையராஜாவுக்கு நீதிமன்றம் கேள்வி! | High Court Questions About Illayarajas Case

இந்நிலையில், இன்று வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தப்போது, பாடல் வரிகள், பாடகர் அனைத்தும் சேர்ந்து தான் பாடல் உருவாகிறது. வரிகள் இல்லை என்றால் பாடல் இல்லை என இருக்கும் போது, பாடலுக்கு பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்ன ஆகும்.

பாடலுக்கு பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னாவது? இளையராஜாவுக்கு நீதிமன்றம் கேள்வி! | High Court Questions About Illayarajas Case

பாடல்கள் கேசட்டுகள், சிடிக்கள் விற்பனை மூலம் வணிக ரீதியாக இளையராஜா பெற்ற தொகை யாருக்குச் சொந்தம்? என்று கேள்வி எழுப்பினர். மேலும்,வணிக ரீதியாக இளையராஜா பெற்ற தொகை மேல்முறையீட்டு வழக்கின் இறுதித் தீர்ப்புக்கு கட்டுப்பட்டது” எனவும் அறிவித்த நீதிபதிகள், “இசையமைப்பு என்பது கிரியேட்டிவ் பணி என்பதால் காப்புரிமை சட்டம் இதற்குப் பொருந்தாது என்று தெரிவித்துள்ளனர்.