மதுவை பாட்டிலில் விற்கும்போது, பாலை விற்கமுடியாதா? - ஐகோர்ட் கேள்வி!
சென்னை ஐகோர்ட் பாலை ஏன் பாட்டிலில் விற்கமுடியாது என்று கேள்வி எழுப்பியுள்ளது.
ஆவின் நிறுவனம் அறிக்கை
பால் விநியோகம் பாக்கெட்டில் இருந்து பாட்டிலுக்கு மாற்றலாமா என்று மக்களிடம் கேட்டதில் சரியான ஆதரவு கிடைக்கவில்லை என்று ஆவின் நிறுவனம் சென்னை ஐகோர்ட்டில் அறிக்கை தாக்கல் செய்துள்ளது.
அப்பொழுது மதுவை பாட்டிலில் விற்கும்பொழுது பாலை ஏன் பாட்டிலில் விற்கக்கூடாது என்று கேள்வி எழுப்பியது. மேலும், மது அருந்துவோரே பாட்டிலை கவனமாகக் கையாளும்போது சாதாரண மக்கள் பாட்டிலை கையாள முடியாதா? என்றும் சென்னை ஐகோர்ட்டு கேள்வி எழுப்பியுள்ளது.
ஐகோர்ட் உத்தரவு
இந்நிலையில், பால் விநியோகம் பாட்டிலுக்கு மாற்றி விற்கலாமா என்று மக்களிடம் கேட்டதில் சரியான ஆதரவு கிடைக்கவில்லை என்று ஆவின் நிறுவனம் சென்னை ஐகோர்ட்டில் அறிக்கை தாக்கல் செய்துள்ளது.
ஆவின் நிறுவனத்தின் இந்த அறிக்கையால் அதிருப்தி அடைந்த நீதிபதிகள், தற்பொழுது மற்றொரு கேள்வி எழுப்பி புதிய அறிக்கையை தாக்கல் செய்யுமாறு உத்தரவிட்டுள்ளனர்.