ஜாமின் வழக்குகள்.. நிபந்தனைகளை மாற்றக் கோரி சவுக்கு சங்கர் மனுத்தாக்கல்!

Tamil nadu Madras High Court
By Vidhya Senthil Oct 16, 2024 02:40 PM GMT
Report

 சவுக்கு சங்கருக்கு தாக்கல் செய்த மனுவுக்கு, வழக்குகளின் பட்டியலைத் தாக்கல் செய்ய உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

சவுக்கு சங்கர்

அரசியல் விமர்சகரும் யூடியூபருமான சவுக்கு சங்கர், உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவில்'சமூக வலைத்தளத்தில் பெண் காவலர்களுக்கு எதிராகப் பேசியதாக என் மீது தேனியில் கஞ்சா வழக்கும், கோவை, சென்னை, திருச்சி, மதுரை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

savukku sankar

இந்த வழக்குகளில் காவல்துறை என்னை கைது செய்தனர். பின்னர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்ட நிலையில் என் மீதான குண்டர் சட்டத்தை உயர் நீதிமன்றம் ரத்து செய்தது. மேலும் பெண் காவலர்களுக்கு எதிராக நான் பேசிய வழக்குகளின் விசாரணைக்கு உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.

தமிழ்நாட்டில் பருவம் தவறிய மழை பொழியக் காரணம் இதுதான் - மதுரை ஆதீனம் பகீர் பதில்!

தமிழ்நாட்டில் பருவம் தவறிய மழை பொழியக் காரணம் இதுதான் - மதுரை ஆதீனம் பகீர் பதில்!

இது தொடர்பாக நீதிமன்றம் விசாரணை நடத்திய போது பல்வேறு வழக்குகளில் எனக்கு ஜாமீன் வழங்கப்பட்ட போது சம்பந்தப்பட்ட காவல் நிலையங்களில் நேரில் ஆஜராகிக் கையெழுத்திட நிபந்தனை விதிக்கப்பட்டது.

எத்தனை வழக்குகள்?

தற்பொழுது நான் சென்னையில் வசிப்பதால் அனைத்து வழக்குகளுக்கும் சேர்த்து ஒரே காவல் நிலையத்தில் கையெழுத்திடும் வகையில் ஜாமீன் நிபந்தனையில் தளர்வு வழங்க வேண்டும்' எனக் கூறப்பட்டிருந்தார். இந்த மனு மீதான விசாரணை நீதிபதி டி.பரதசக்கரவர்த்தி முன் இன்று விசாரணைக்கு வந்தது.

savukku case

அப்போது, ''சவுக்கு சங்கர் ஒரே காவல் நிலையத்தில் கையெழுத்திடும் வகையில் நிபந்தனையைத் தளர்த்தக்கூடாது'' அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து நீதிபதி டி.பரதசக்கரவர்த்தி , ''சவுக்கு சங்கர் மீது எத்தனை வழக்குகள் உள்ளன?

எத்தனை வழக்குகளில் ஜாமீன் பெற்றுள்ளார்? எந்த காவல் நிலையத்தில் கையெழுத்திட்டு வருகிறார் என்பது குறித்த தகவல்களைத் தாக்கல் செய்ய வேண்டும் என கூறி விசாரணையை அக்.21-க்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.