தமிழ்நாட்டில் பருவம் தவறிய மழை பொழியக் காரணம் இதுதான் - மதுரை ஆதீனம் பகீர் பதில்!
பொதுமக்கள் இடையே பக்தி குறைவாக இருப்பது தான் பருவம் தவறிய மழை பொழியக் காரணம் என மதுரை ஆதீனம் கருத்து தெரிவித்துள்ளார்.
மதுரை ஆதீனம்
வீரபாண்டிய கட்டபொம்மனின் 225 ஆவது நினைவு நாளை முன்னிட்டு மதுரை பெரியார் பேருந்து நிலையம் அருகே உள்ள கட்டபொம்மன் சிலைக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் அரசியல் நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
அந்த வகையில் மதுரை ஆதினம் கட்ட பொம்மன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த மதுரை ஆதீனம்,"இன்றைய தலைமுறைகள் சுதந்திரப் போராட்ட தியாகிகளை நினைவு கூர்ந்து மரியாதை செலுத்த வேண்டும்.
வெள்ளையனை எதிர்த்துப் போராடிய வீரபாண்டிய கட்டபொம்மன் வரி கட்ட மறுத்தவர் வீரபாண்டிய கட்டபொம்மன். தொடர்ந்து பேசிய அவர், "இளைஞர்கள் விடுதலைப் போராட்ட தியாகிகளை நினைவு கூறும் வகையில் தமிழ்நாடு அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று கூறினார்.
பருவ மழை
மேலும் அந்த வீரர்கள் இல்லை என்றால் நான் இன்று இல்லை" என்று கூறினார். வடகிழக்கு பருவமழையைப் பொருத்த வரையில், தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அக்.1 முதல் இன்று (அக்.16) வரையிலான காலக்கட்டத்தில், 138 மி.மீட்டர் மழை பதிவாகியுள்ளது.
தற்பொழுது தமிழகத்தில் பருவம் தவறிய மழை பொழியக் காரணம் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்குப் பதில் அளித்த ஆதினம், "பொதுமக்கள் இடையே பக்தி குறைவாக இருப்பது தான் காரணம் என்று கூறினார்.