உதயநிதியின் டி-ஷர்ட் விவகாரம்.. உயர்நீதிமன்றம் கேட்ட கேள்வி - உடனே அரசு பதிலளிக்க உத்தரவு!
உதயநிதிக்கு எதிராக போடப்பட்ட ஆடை வழக்கில் விளக்கமளிக்க தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
டி- ஷர்ட் விவகாரம்..
துனை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அரசு விழாக்களில் டி- ஷர்ட் அணிந்து கலந்து கொள்வதற்கு பல எதிர்ப்புகள் எழுந்தது. எனவே அரசு விழாக்களில் தமிழ் கலாசார உடை அணிய வேண்டும் என்று உத்தரவிட கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இது தொடர்பாக சென்னையை சேர்ந்த வழக்கறிஞர்சத்யகுமார் என்பவர் இந்த மனுவை தாக்கல் செய்தார். கடந்த 2019 ஆண்டு ஜூன் 1ம் தேதியிட்ட அரசு உத்தரவு எண்.62ன்படி அனைத்து அரசு ஊழியர்களும் நேர்த்தியான, சுத்தமான, முறைப்படியான உடைகளை உடுத்த வேண்டும் என்பதை,
அரசு உத்தரவு
உதயநிதி பின்பற்றாமல் உள்ளார் என்று அதில் குறிப்பிட்டுள்ளார். இந்த வழக்கு இன்று நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் கூறுகையில், டிஷர்ட் கே ஷூவல் உடையா? அரசியல் சட்ட பதவி வகிப்போருக்கு ஆடை கட்டுப்பாடு உள்ளதா?
அரசு ஊழியர்களுக்கு விதிக்கப்பட்ட ஆடைக் கட்டுப்பாடு குறித்த அரசாணை அரசியல் சட்ட பதவி வகிப்போருக்கும் பொருந்துமா ? என்று கேள்வி எழுப்பினர்.
இந்த நிலையில், அரசு ஊழியர்களுக்கு விதிக்கப்பட்ட ஆடைக் கட்டுப்பாடு குறித்த அரசாணை அரசியல் சட்ட பதவி வகிப்போருக்கும் இது பொருந்துமா? என்ற கேள்விக்கு தமிழக அரசு ஒரு வார கால அவகாசத்தில் பதிலளிக்க வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.