காவி மிரட்டல்களுக்கு பயப்படமாட்டேன்...சனாதன தர்ம சர்ச்சை...உதயநிதி பதிலடி

Udhayanidhi Stalin Tamil nadu DMK
By Karthick Sep 03, 2023 10:05 AM GMT
Report

தனக்கு வரும் காவி மிரட்டல்களை கண்டு தான் பயப்படப்போவதில்லை என தமிழக விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

உதயநிதி பேச்சு  

சென்னையில் நடைபெற்ற தமிழக முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் சனாதன ஒழிப்பு மாநாட்டில் கலந்து கொண்ட உதயநிதி ஸ்டாலின், கொசு, டெங்கு காய்ச்சல், மலேரியா, கொரோனா போன்ற சனாதனத்தை எதிர்ப்பதைவிட, ஒழிப்பதே நாம் செய்ய வேண்டியது என பேசியிருந்தார்.

udhayanidhi-stalin-replies-for-sanathan-issue

இந்நிலையில் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து உதயநிதி ஸ்டாலினின் இந்த பேச்சு சட்டவிரோதமானது என்றும் அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி உச்சநீதிமன்ற வழக்கறிஞர் வீனீத் ஜிண்டால் டெல்லி போலிசில் புகார் அளித்துள்ளார்.

உதயநிதி விளக்கம் 

இந்நிலையில், இந்த சர்ச்சை குறித்து சமூகவலைதளப்பக்கத்தில் இது குறித்து விளக்கமளித்துள்ள உதயநிதி ஸ்டாலின், தான் ஒருபோதும் சனாதன தர்மத்தை பின்பற்றும் மக்களை இழிவாக பேசவில்லை என குறிப்பிட்டு, சனாதன தர்மம் என்பது சாதி, மத பெயரால் மக்களை பிரிக்கும் கொள்கை என்றும் அதனை வேரோடு அகற்றி, மனித நேயத்தையும் மனித சமத்துவத்தையும் நிலை நிறுத்துவதாகும் என பதிவிட்டு இருக்கிறார்.

udhayanidhi-stalin-replies-for-sanathan-issue

இதனால் பாதிக்கப்படும் ஒடுக்கப்பட்ட மற்றும் ஒதுக்கப்பட்ட மக்களின் சார்பாகவே தான் பேசியதாக குறிப்பிட்டு, காவி மிரட்டல்களுக்கு பயப்பட மாட்டோம் என்றும் நீதிமன்றமாக இருந்தாலும் சரி, மக்கள் மன்றமாக இருந்தாலும் சரி தனக்கு வரும் சவால்களை எதிர்கொள்ள தயாராக இருக்கிறேன் என தனது ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.