கல்யாணம் மட்டும் பண்ணிக்க மாட்டாங்க; தற்கொலைக்கு முயன்றேன் - அனுயா ஆதங்கம்

Anuya Bhagvath Tamil Cinema
By Sumathi Jan 28, 2024 09:00 AM GMT
Report

நீண்ட நாட்களுக்கு பிறகு நடிகை அனுயா பேட்டி ஒன்றை அளித்துள்ளார்.

நடிகை அனுயா

"சிவா மனசுல சக்தி" படத்தின் மூலம் பிரபலமானவர் நடிகை அனுயா பகவத். அதன்பின், சம்பவம், நகரம் போன்ற குறிப்பிட்ட சில படங்களில் மட்டுமே நடித்தார். அதன்பின் சிறிய இடைவெளிக்குப் பிறகு விஜய்யின் நண்பன் படத்தில் துணை நடிகையாக ரீ என்ட்ரி கொடுத்தார்.

actress anuya bhagwat

தொடர்ந்து சினிமாவில் இருந்து விலகினார். ஆனால், சமூக வலைதளங்களில் ஆக்டிவாகவே இருந்து வருகிறார். இந்நிலையில், அவர் அளித்துள்ள சமீபத்திய பேட்டி ஒன்றில், மார்பிங் வீடியோவால் நான் மிகுந்த மன அழுத்தத்திற்கு ஆளானேன்.

சுத்தி நல்ல ஆம்பளைங்களே இல்ல..!! ஒரே வீடியோ ...வேதனையை சொன்ன அனுயா!!

சுத்தி நல்ல ஆம்பளைங்களே இல்ல..!! ஒரே வீடியோ ...வேதனையை சொன்ன அனுயா!!

மன அழுத்தம்

அந்த நேரத்தில் அந்த பிரச்சனையை நான் எப்படி எதிர் கொண்டேன் என்று எனக்கு தெரியவில்லை. தற்கொலை செய்து கொள்ளலாம் என்ற எண்ணம் வந்தது. அந்த எண்ணத்தில் இருந்து என்னை மாற்றியது என் குடும்பம்.

கல்யாணம் மட்டும் பண்ணிக்க மாட்டாங்க; தற்கொலைக்கு முயன்றேன் - அனுயா ஆதங்கம் | Heroine Anuya Bhagwat About Gap Of Cinema

அதே போல சுசி லீக் பிரச்சனைக்கு பிறகு நான், சினிமாவைவிட்டு விலக நினைத்து மிகுந்த மன அழுத்தத்தில் இருந்தேன். ஆனால், எத்தனை நாட்கள் நான் வீட்டிற்குள் இருக்க முடியும், வீட்டில் இருந்ததால் என் மன அழுத்தம் அதிகமானதால், அதை கடந்து வந்தேன்.

படத்தில் ஒரு ஐட்டம் பாடல் வந்தால் கைதட்டி பார்க்கும் ஆண்கள், அந்த பாடலில் ஐட்டம் டான்ஸ் ஆடிய பெண்ணை கல்யாணம் மட்டும் பண்ணிக்க மாட்டாங்க என ஆதங்கம் தெரிவித்துள்ளார்.