கிளாமரான படபோஸ்டர்.. பையன் கேள்வி கேட்ட அப்போ ? நடிகை அர்ச்சனா வேதனை..!!
பிரபல சீரியல் நடிகை அர்ச்சனா மாரியப்பன் தனது சினிமா அனுபவங்களை பேட்டியில் பகிர்ந்து கொண்டுள்ளார்.
அர்ச்சனா மாரியப்பன்
பிரபல சீரியல் நடிகையான அர்ச்சனா மாரியப்பன் தமிழில் பல சீரியல்களில் வில்லி வேடத்தில் நடித்துள்ளார். இவர் வாணி ராணி, அழகு, வள்ளி, அழகி போன்ற சீரியல்களில் நடித்துள்ளார்.
மேலும், போகி, முத்தின கத்திரிக்காய், நாடோடிகள், வெள்ளக்கார துரை போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் சமீபத்தில் ஒரு பிரபல யூடியூப் சேனலுக்கு பேட்டியளித்துள்ளார். அதில் தனது படப்போஸ்டர் ஒன்றை பார்த்து மகன் கேட்ட கேள்வி குறித்து வேதனையுடன் பகிர்ந்து கொண்டுள்ளார்.
பையன் கேட்ட கேள்வி
மணமகன் தேவை என்ற படத்தில் அர்ச்சனா மாரியப்பன் நடித்துள்ளார். அந்த படத்தின் கதையை இயக்குநர் தன்னிடம் சொன்ன போது வேறு விதமாக கதை இருந்ததாக கூறிய அவர், ஆனால், படம் முடிந்த போது, தான் கதாபாத்திர வடிவமைப்பு வேறு மாதிரியாக இருந்தது என்று குறிப்பிட்டார்.
படத்தின் போஸ்டரை பார்த்த தன்னுடைய மகன் "அம்மா இது நீதானே?" என்று தன்னிடம் கேட்டபோது, அந்த நேரத்தில் தனக்கு பெரிய தர்ம சங்கடமாக இருந்தது என்றும் வேதனையுடன் அவர் குறிப்பிட்டார். அந்த மணமகன் தேவை படம் தான் பின்னர் அசைவம் என்ற பெயரில் வெளியாகி உள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.