சுத்தி நல்ல ஆம்பளைங்களே இல்ல..!! ஒரே வீடியோ ...வேதனையை சொன்ன அனுயா!!
ஒரு சில படங்களே நடித்திருந்தாலும், இன்றளவும் ரசிகர்களுக்கு நினைவிற்கு ஒரு நடிகையாக இருந்து வருகின்றார் அனுயா.
அனுயா
ஜீவா - எம்.ராஜேஷ் கூட்டணியில் வெளியான "சிவா மனசுல சக்தி" படத்தின் பெரிய வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தவர் நடிகை அனுயா. முதல் படத்திலேயே நடிப்பில் அனைத்து இடங்களிலும் ஸ்கோர் பண்ண அவர், பல முக்கிய நாளிதழ்களின் பாராட்டுகளை பெற்றார்.
முதல் படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து முன்னணி நடிகையாக உருப்பெறுவர் என எதிர்பார்க்கப்பட்ட அனுயா மதுரை சம்பவம், நகரம் போன்ற குறிப்பிட்ட சில படங்களில் மட்டுமே நடித்தார். சிறிது காலம் படங்களில் தோன்றாத அவர் விஜய்யின் "நண்பன்" படத்தில் இலியானாவின் அக்காவாக நடித்து துணை நடிகையாக ரீ என்ட்ரி கொடுத்தார். அதன் பிறகு ஒரு சில சொற்ப படங்களில் நடித்து விட்டு, சினிமாவில் இருந்து முழுவதுமாக விலகினார்.
இருப்பினும், இன்றளவும் ரசிகர்களுக்கு நினைவிருக்கும் ஒரு நடிகையாக சமூகவலைத்தளங்களில் மிகவும் அசிட்டிஸ் ஆக்டிவாகவே நீடித்து வருகின்றார் அனுயா. பிக் பாஸ் சீசன் 1 நிகழ்ச்சியில் போட்டியாளராக என்ட்ரி கொடுத்த அனுயா, முதல் போட்டியாளராக பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்டார். தற்போது சீரியல்களில் நடித்து வருகிறார் அனுயா.
நல்ல ஆம்பளைங்களே இல்ல
இந்நிலையில், தான் அனுயா இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டு தன்னை குறித்து வெளியான வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார். அந்த வீடியோவில், "நான் துபாயில் பிறந்த வளர்ந்தவள். எனக்கு தமிழ் கொஞ்சமாக தான் தெரியும். என்னுடைய அப்பாவும் அம்மாவும் மருத்துவராக இருந்து வருகிறார்கள். என்னுடைய அண்ணன் வெளிநாட்டில் இருக்கிறார்.
நான் புனேவில் பொறியியல் பட்டம் பெற்றேன். பிறகு சினிமாவில் நடிக்க வந்துவிட்டேன். நான் விஜய் ஆண்டனி, ஜீவா, சுந்தர்.சி, ஹரிகுமார் உள்ளிட்டோருடன் ரிலேஷன்ஷிப்பில் இருந்து வருகிறேன் என எழும் வதந்திகள் அனைத்தும் உண்மையல்ல. நான் இன்னும் சிங்கிளாக தான் இருக்கிறேன். என்னிடம் கேட்க ஏதாவது கேள்விகள் இருந்தால் நீங்கள் என்னிடம் கேட்கலாம்" என பேசி இருந்தார் அனுயா.
அனுயாவின் இந்த வீடியோ போஸ்டுக்கு ரசிகர்கள் கமெண்ட் மூலம் பல கேள்விகளை கேட்டு இருந்தனர். அதில் ஒருவர் "நீங்கள் என் தனியாக இருக்கிறீர்கள்? திருமணம் செய்து கொள்ளலாமே?" என கேள்விகளை கேட்டு இருந்தனர். ரசிகர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்த அனுயா "என்னை சுற்றி இருக்கும் ஆண்கள் யாரும் நல்லவர்கள் இல்லை" என பதிலளித்து இருந்தார்.