ATM பின் நம்பர் அடிக்கடி மறக்குதா? கவலையே வேண்டாம் - உடனடியாக மாற்ற ஈஸியான 2 வழிகள் உள்ளது!
பின் நம்பரை மாற்ற சுலபமான வழி உள்ளது தெரிந்துகொள்ளுங்கள்.
ATM மெஷின்
முன்பெல்லாம் வங்கியில் இருந்து பணம் எடுப்பதற்காக வங்கிக்கு சென்று எடுக்கவேண்டியதாக இருக்கும். தற்பொழுது பெரும்பினாலான மக்கள் ATM மூலமாக எடுத்துக்கொள்கின்றனர். அதனால் பல இடங்களில் மூளை முடுக்கெல்லாம் ATM மெஷின் வைத்துள்ளனர்.
அந்த மெஷின் மூலம் பின் நம்பரை போட்டு எடுத்துக்கொள்ளலாம், ஆனால் அதிலும் பிரச்சனை, பலர் தனது ATM நம்பரை அடிக்கடி மறந்துவிடுவது உண்டு. இதனால் பணம் எடுக்கமுடியாமல் தவிக்கின்றனர். இதற்கெல்லாம் இரண்டு ஈஸியான வழி உள்ளது.
ஈஸியான வழிகள்
இனிநிலையில், ஏடிஎம் இயந்திரம் மூலமாகவும் ஆன்லைன் மூலமாகவும் பாதுகாப்பாக புதிய பின் நம்பரை நாமே எளிதாக உருவாக்க முடியும். நாம் எந்த வங்கியில் கணக்க்ன்னு வைத்துள்ளோமோ ATM-க்கு சென்று அந்த கார்டை மிஷினில் சொருகியதும், Forgot PIN என்ற ஆப்ஷனை தேர்வு செய்யவும்.
அதில் வங்கி கணக்கனுடன் இணைக்கப்பட்ட மொபைல் நம்பரை டைப் செய்யவேண்டும். அப்பொழுது உங்கள் நம்பருக்கு ஒரு OTP வரும், அதை மிஷினில் டைப் செய்த பிறகு, புதிய ஏடிஎம் பின் (ATM PIN) உருவாக்கும் வாய்ப்பு வழங்கப்படும்.
ஆன்லைனிலும் ஏடிஎம் பின் நம்பரை மாற்ற முடியும். கணக்கு வைத்திருக்கும் வங்கியின் அதிகாரபூர்வ நெட்பேங்கிங் இணையதளத்தில் ஏடிஎம் பின் நம்பரை மாற்றிக்கொள்ளலாம். அந்த இணையதளத்தில் நுழைந்ததும், ஏடிஎம் கார்டு பகுதிக்கு சென்று PIN மாற்றும் ஆப்ஷனை கிளிக் செய்யவும்.
அப்போது, ஏடிஎம் கார்டில் உள்ள CVV, கார்டு எண்ணின் கடைசி சில இலக்கங்கள் காலாவதி தேதி போன்ற விவரங்களைக் பதிவிட வேண்டும். பிறகு பதிவு செய்த நம்பருக்கு OTP வரும், டைப் செய்து, புதிய நம்பரை உருவாக்கலாம்.