ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து பல லட்சம் கொள்ளை - வைரலாகும் அதிர்ச்சி சிசிடிவி வீடியோ...!
ராஜஸ்தான் மாநிலத்தில் ஏடிஎம் இயந்திரத்தை பிடுங்கி எறிந்து பல லட்சம் கொள்ளையடிக்கப்பட்ட சிசிடிவி வீடியோ தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து பல லட்சம் கொள்ளை
சமூகவலைத்தளங்களில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது.
அந்த வீடியோவில்,
ராஜஸ்தான் மாநிலம் அஜ்மீரில் நேற்று ஏடிஎம் இயந்திரத்தை பிடுங்கி எறிந்த திருடர்கள் பணத்தை கொள்ளையடித்து சென்றனர்.
முதல் திருட்டில் ரூ.8 லட்சம் கொள்ளையடிக்கப்பட்டது. 2-வது திருட்டில் சுமார் ரூ.30 லட்சம் பணம் திருடப்பட்டுள்ளது. தற்போது இது குறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் இது குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும், 2 முறையும் ஒரே மாதிரியான கொள்ளையடிக்கப்பட்டுள்ளதால், ஒரே கும்பலாக இருக்கலாம் என்ற சந்தேக கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், இது தொடர்பான சிசிடிவி வீடியோ சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இந்த வீடியோவைப் பார்த்த நெட்டிசன்கள் சற்றே அதிர்ச்சி அடைந்து கமெண்ட் செய்து வருகின்றனர்.
#WATCH Thieves uprooted ATM machine & looted cash yesterday in Ajmer, Rajasthan
— ANI (@ANI) January 27, 2023
ATM machines looted in Arain & Roopangarh. Rs. 8 Lakhs & Rs. 30 Lakhs were stolen. Robbery method in both cases identical so it could be same gang: Vaibhav Sharma, Additional SP, Rural pic.twitter.com/CszNQ28A91