கோவிட் போல் அடுத்த ஆண்டு காத்திருக்கும் ஆபத்து.. மீண்டும் ஒரு பேரழிவா? நாஸ்ட்ரடாமஸ் கணிப்பு!
நாஸ்ட்ரடாமஸ் கணிப்புகளின்படி 2025ம் ஆண்டு என்ன நடக்கும் என்று பார்க்கலாம்.
நாஸ்டர்டாமஸ்
தீர்க்கதரிசிகளில் மிக முக்கியமான நபராக கருதப்படுபவர் நாஸ்டர்டாமஸ். இவர் எதிர்காலத்தில் உலகம் முழுக்க என்ன நடக்கும் என்பதை தனது புத்தகமான Les Propheties என்பதில் கவிதைகளாக எழுதி வைத்துவிட்டு சென்றார்.
2024 ஆம் ஆண்டு இறுதி நெருங்கிய 2025 ஆம் ஆண்டு என்னென்ன நடக்கும் என்பது குறித்து பதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் 2025 ஆம் ஆண்டு ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையிலான போர் முடிவுக்கு வர வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
கடந்த 2022 ஆண்டு தொடங்கிய இந்த போர் இரு தரப்புக்கும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. தொடர்ந்து நீண்ட காலமாக நீடிக்கும் இந்த போரால் பொருளாதாரமும், உயிர்ச்சேதமும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
பேரழிவா?
இந்த போர் இரு நாடுகளை மட்டுமின்றி அந்த நாடுகளிடம் வர்த்தகம் செய்யும் இந்தியாவில் உள்பட பல நாடுகளுக்கும் பாதிப்பை உண்டாக்கியிருக்கிறது. அதேபோல, இவர் முன்பே கணித்திருந்த கோவிட் லாக்டவுன் நிகழ்ந்து உலகை திருப்பிப்போட்டு அதிலிருந்து இன்னும் மீழாத நிலையில்,
அடுத்த ஆண்டு பிளேக் புற்று நோய் ஏற்பட வாய்ப்புள்ளதாக கணித்துள்ளார். மேலும் விண்கற்கள் பூமி மீது மோதுவதற்கு வாய்ப்புள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. இதேபோன்று தென் அமெரிக்கா நாடான பிரேசிலில்
இயற்கை பேரழிவுகள் ஏற்படலாம், அதுமட்டுமின்றி எரிமலை வெடிப்பு, வெள்ளம் போன்றவற்றால் பேரழிவு ஏற்படும் என்று புத்தகத்தின் அடிப்படையில் கணிக்கப்பட்டுள்ளது.