மக்களே அபாயம்..தப்பித்தவறி கூட இந்த பொருட்களை விமானத்தில் எடுத்து செல்லாதீர்கள்!
Flight
World
By Swetha
விமானத்தில் சில பொருட்களை எடுத்துச் செல்ல தடைவிதிக்கப்பட்டுள்ளது.
இந்த பொருட்கள்
விமானத்தில் பயணிக்கும்போது செய்யப்படும் பாதுகாப்பு சோதனைகள் நடக்கும். விமானத்தில் பயணிக்கும் பயணியை மட்டுமல்லாமல், அவர் எடுத்து வரும் பையையும் பாதுகாப்பு அதிகாரிகள் சோதனை செய்வது வழக்கம்.
இது குறித்த தெளிவான விதிமுறைகளை விமான நிலையங்கள் வழங்கி இருந்தபோதிலும், பல பயணிகளுக்கு என்னென்ன பொருட்கள் எடுத்து வர வேண்டும் என்பது தெரியவில்லை. எனவே ஏர்போர்ட் செக்-இன் பைகளில் தடைசெய்யப்பட்டுள்ள பொருட்கள் குறித்து காணலாம்.
விமானத்தில்..
- பேட்டரிகள் காரணமாக விமானத்தில் தீப்பிடிக்க வாய்ப்பு உள்ளது. இவை சேதமடைந்தாலோ, ஷார்ட் சர்க்யூட் ஏற்பட்டாலோ அல்லது அதிகபடியாக வெப்பமடைந்தாலோ அவ்வாறு நடக்கலாம்.
- பேட்டரி மூலமாக இயங்கும் வீல் சேர்கள் மற்றும் நடமாட்ட துணைக் கருவிகளில் வெட் பேட்டரிகள் மூலம் இயங்குவதுண்டு. இவை சேதமடைந்தால் அந்த பேட்டரிகளில் இருக்கக்கூடிய ஆசிட்டானது விமான பாகங்களை சேதமடைய செய்து, அவற்றின் செயல்பாட்டை பாதிக்க வாய்ப்புள்ளது.
- கம்ப்ரஸ் செய்யப்பட்ட கேஸ் கேட்ரிஜ்கள், சிலிண்டர் லைட்டர்கள், இ-சிகரெட்டுகளில் உள்ள வாயுக்கள் எளிதில் தீப்பற்றக் கூடியவை. ஆகவே இவை சேதமடைந்தால் விமானம் வெடித்து சிதற வாய்ப்புள்ளது.
- ஸ்விட்ச் ஆஃப் செய்ய முடியாத எலெக்ட்ரானிக் சாதனங்களின் பேட்டரிகள் மூலமாக இயங்கும் சாதனங்கள் அதிக வெப்பத்தை வெளியிடக்கூடியவை, அதனால் தீப்பிடிக்க வாய்ப்புள்ளது.
- தெர்மாமீட்டர் அல்லது பேரோமீட்டர், மெர்குரி நிரப்பப்பட்ட மருத்துவ சாதனங்கள் சேதமடைந்தால் அவற்றில் இருக்கக்கூடிய பாதரசம் கசிந்து, அது விமானத்தில் சேதத்தை ஏற்படுத்தலாம். அதுமட்டுமல்லாமல் அது விமானத்தில் பரவிவிட்டால், அதனால் ஏரோபிளேன் பாகங்கள் சேதமடைந்து அவை இயங்காமல் போக வாய்ப்புள்ளது.
- உலர்ந்த தேங்காயில் அதிக அளவு எண்ணெய் இருக்கும். இது எளிதில் தீப்பற்றக் கூடியது. ஆகவே இது போன்ற பொருட்களை விமானத்தில் எடுத்துச் செல்வது வெப்பத்தை உருவாக்கி அதனை தீப்பிடிக்க வைத்து விடலாம்.