பாஸ் மார்க் போடுங்க ப்ளீஸ்; இல்லைனா என் அப்பா.. விடைத்தாளில் மாணவி வைத்த நூதன கோரிக்கை!

Bihar School Incident
By Swetha Mar 13, 2024 11:19 AM GMT
Report

 விடைத்தாளில் மாணவி எழுதிய வாசகங்கள் இணையத்தில் பரவி அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

விடைத்தாள் 

பீகார் மாநிலத்தில், 10ம் வகுப்பு பொதுத்தேர்வு கடந்த மாதம் நடைபெற்றது. பொதுத்தேர்வு முடிவடைந்து விடைத்தாள் திருத்தும் பணி நடைபெற்று, தற்போது தேர்வின் முடிவுகளும் வெளியாகியுள்ளது.

பாஸ் மார்க் போடுங்க ப்ளீஸ்; இல்லைனா என் அப்பா.. விடைத்தாளில் மாணவி வைத்த நூதன கோரிக்கை! | Help Me Pass Class 10 Girls Board Answer Sheet

இந்நிலையில், தான் சமூக வலைத்தளத்தில் 10ம் வகுப்பு மனைவி ஒருவரின் விடைத்தாளில் வைத்த நூதன கோரிக்கை வைரலாக பரவி வருகிறது. அதில், தனது குடும்ப சூழ்நிலையை  பற்றி கூறியதோடு,

தான் தேர்ச்சி பெறாவிட்டால் தந்தை திருமணம் செய்து வைத்துவிடுவார். எனவே தயவு செய்து தன்னை எப்படியாவது பாஸ் மார்க் போட்டு காப்பாற்றுங்கள் என கோரிக்கை வைத்துள்ளார்.

பழைய ரூ.20 நோட் இருக்கா? அப்போ நீங்கள் லட்சக்கணக்கில் சம்பாதிக்கலாம் - எப்படி தெரியுமா?

பழைய ரூ.20 நோட் இருக்கா? அப்போ நீங்கள் லட்சக்கணக்கில் சம்பாதிக்கலாம் - எப்படி தெரியுமா?

நூதன கோரிக்கை

இதுதொடர்பாக அந்த மாணவி தனது விடைத்தாளில், "எனது அப்பா ஒரு விவசாயி. அவருக்கு குறைந்த அளவில் தான் வருமானம் கிடைக்கிறது. இதனால் எனது கல்விக்காக அவரால் செலவை செய்ய முடியாத நிலை உள்ளது. மேலும் அவர் என்னை படிக்க வைக்க விரும்பவில்லை. நிதி நெருக்கடியால் படிப்பை கைவிடும்படி கூறி வருகிறார்.

பாஸ் மார்க் போடுங்க ப்ளீஸ்; இல்லைனா என் அப்பா.. விடைத்தாளில் மாணவி வைத்த நூதன கோரிக்கை! | Help Me Pass Class 10 Girls Board Answer Sheet

அதையும் மீறி தான் நான் படித்து வருகிறேன். மேலும் தேர்வில் நல்ல மதிப்பெண் எடுக்க வேண்டும். இல்லாவிட்டால் திருமணம் செய்து வைப்பதாக கூறியுள்ளார். தயவு செய்து என்னை காப்பாற்றுங்கள். எனக்கு நல்ல மதிப்பெண்கள் தந்து எதிர்காலத்தை காப்பாற்ற உதவுங்கள். நான் மிகவும் ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்த மாணவி" என எழுதியுள்ளார்.

பாஸ் மார்க் போடுங்க ப்ளீஸ்; இல்லைனா என் அப்பா.. விடைத்தாளில் மாணவி வைத்த நூதன கோரிக்கை! | Help Me Pass Class 10 Girls Board Answer Sheet

இது குறித்து ஆசிரியர்களிடம் பேசியபோது, "மாணவ-மாணவிகள் இதுபோன்ற கோரிக்கையை வைப்பது என்பது முதல் முறையல்ல. அவ்வப்போது இத்தகைய கோரிக்கை என்பது விடைத்தாளில் இருக்கும். ஆனால் நாங்கள் அதற்கெல்லாம் மதிப்பெண்கள் வழங்குவது இல்லை. விடை சரியாக இருந்தால் மட்டுமே மதிப்பெண் வழங்குகிறோம் என தெரிவித்துள்ளனர்.