சாத்தான்குளம் அருகே திடீரென தரையிறங்கிய ஹெலிகாப்டர்; மக்கள் அதிர்ச்சி - என்ன காரணம்?
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகேயுள்ள காட்டுப்பகுதியில் திடீரென தரையிறங்கிய ஹெலிகாப்டரால் பரபரப்பு ஏற்பட்டது.
ஹெலிகாப்டர்
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகேயுள்ள அம்பலச்சேரி டு நாசரேத் சாலையிலுள்ள காட்டுப்பகுதியில் கடந்த 10 நாட்களாக அதிக விலையுயர்ந்த சொகுசு கார்கள் வந்து சென்றுள்ளது.
அந்த இடத்தில் குறிப்பிட்ட இடம் தகரம் அமைத்து அடைக்கப்பட்டு, இந்தியா மற்றும் அமெரிக்கா நாட்டின் கொடிகளும் நடப்பட்டிருந்தன. மேலும், அங்கு சிறிய மைதானமும், தற்காலிகப் தார்ச்சாலையும் அமைக்கப்பட்டிருந்தன. இந்நிலையில் திடீரென ஹெலிகாப்டர் ஒன்று அங்கு தரையிறங்கியது. பந்தலுக்குச் சென்றனர்.
தொழிற்சாலை
அதிலிருந்து சிலர் இறங்கி காரில் ஏறி அங்கு அமைக்கப்பட்டிருந்தசுமார் 1 மணி நேரத்திற்கு பிறகு அவர்கல் மீண்டும் அந்த ஹெலிகாப்டரில் ஏறிச்சென்றனர். இதனால் அங்கிருந்த மக்கள் அதிர்ச்சியடைந்தனர்.
இது குறித்து அரசுத் தரப்பு அதிகாரிகள் கூறியதாவது "நாக்பூரை தலைமையிடமாகக்கொண்ட வி.பி.வி.வி என்ற கார் உதிரி பாகங்கள் தயாரிக்கும் தொழிற்சாலை நிர்வாகம், அங்கு உதிரி பாக தொழிற்சாலை அமைப்பதற்காக தமிழக அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
இதற்காக அந்தப் பகுதியில் தொழிற்சாலை அமைப்பதற்காக அதன் இயக்குநர்கள், பங்குதாரர்கள் அடிக்கல் நாட்டிவிட்டுச் சென்றிருக்கின்றனர்” என்று தெரிவித்துள்ளனர்.