ஹோட்டல் கூரையில் விழுந்து நொறுங்கிய விமானம் - மக்கள் வெளியேற்றம்!
ஹெலிகாப்டர் ஒன்று கூரையின் மீது விழுந்து நொறுங்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விமான விபத்து
ஆஸ்திரேலியா, கெய்ர்ன்ஸ் நகரில் பிரபல ஹோட்டலான ஹில்டன் டபுள் ட்ரீ இயங்கி வருகிறது. இதன் நீச்சல் குளம் அமைந்துள்ள மேற்கூரையில் ஹெலிகாப்டர் ஒன்று விழுந்து விபத்துக்குள்ளானது.
இரட்டை எஞ்சின் கொண்ட ஹெலிகாப்டர் ஹோட்டலின் மேற்கூரையைத் தாக்கி தீ பற்றி எரிந்துள்ளது. உடனடியாக, ஹோட்டலில் இருந்த 100க்கும் மேற்பட்டோர் வெளியேற்றப்பட்டனர்.
இருவர் பலி
இந்த விபத்தில் விமானி உட்பட ஹெலிகாப்டரில் பயணித்த இருவரும் உயிரிழந்துள்ளனர். தரையில் இருந்த மக்களுக்கு எந்த காயமும் ஏற்படவில்லை என்று அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
தற்போது, போக்குவரத்து பாதுகாப்பு ஒழுங்குமுறை அதிகாரியுடன் இணைந்து சம்பவம் குறித்து, தடயவியல் விபத்துப் பிரிவு மற்றும் போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.