விமானத்துக்கு நிகரான வேகம் - 1000 கி.மீ வேகத்தில் பறக்கும் ஹைபர்லூப் ரயில்

China Railways
By Karthikraja Aug 10, 2024 03:30 PM GMT
Karthikraja

Karthikraja

in உலகம்
Report

1000 கி.மீ வேகத்தில் பயணிக்கும் ஹைபர்லூப் ரயிலின் சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நடைபெற்றுள்ளது.

ஹைபர்லூப் ரயில்

மணிக்கு 1000 கி.மீ வேகத்தில் செல்லும் ஹைப்பர்லூப் ரயிலை சீன அரசு உருவாக்கியுள்ளது. சீனாவில் உள்ள டத்தோங் நகரில், இதற்காக 2 கி.மீ தொலைவுக்கு வழித்தடத்தை உருவாக்கியது. 

china hyperloop train

இந்த வழித்தடத்தில் சமீபத்தில் நடைபெற்ற சோதனை ஓட்டத்தில் எதிர்பார்த்த வேகத்தை அடைந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

சென்னையில் வர உள்ள ரோப் கார் திட்டம் - எந்த பகுதியில் தெரியுமா?

சென்னையில் வர உள்ள ரோப் கார் திட்டம் - எந்த பகுதியில் தெரியுமா?

மாக்லேவ் தொழில்நுட்பம்

மாக்லேவ் தொழில்நுட்பத்தின் அடிப்படையில் செயல்படும் இந்த ரயிலின் சக்கரம் தண்டவாளத்துடன் உராய்வு கொள்ளாது என்பதால் விமானத்துக்கு நிகரான வேகத்தில் இந்த ரயிலால் செல்ல முடியும் என கூறப்படுகிறது. 

china hyperloop train

தற்போது மணிக்கு 350 கி.மீ வேகத்தில் செல்லும் புல்லட் ரயில் மூலம் சீன தலைநகர் பெய்ஜிங்கிலிருந்து 1,200 கி.மீ தூரத்தில் உள்ள ஷாங்காய்க்கு 4.18 மணி நேரத்தில் செல்ல முடியும் நிலையில் ஹைப்பர்லூப் ரயில் பயன்பாட்டுக்கு வந்தால், இந்த தூரத்தை 90 நிமிடங்களில் கடக்கமுடியும்.

சீன விண்வெளி அறிவியல் மற்றும் தொழில்கழகம் மற்றும் ஷாங்சி மாகண அரசு இணைந்து இந்த ஹைப்பர்லூப் ரயில் திட்டத்தை மேற்கொண்டு வருகிறது. வானத்தில் பறக்கும் விமானங்களுக்கு பதிலாக, ரெயில் தரையில் பறக்க வேண்டும் என்ற நோக்கத்தில் இதை உருவாக்கி உள்ளோம் என சீன பொறியாளர்கள் தெரிவித்துள்ளனர்