நடுவானில் பறந்து கொண்டிருந்த ஹெலிகாப்டர் - அதிகாலை நடந்த கோர சம்பவம்!
மகாராஷ்டிரா மாநிலத்தில் ஹெலிகாப்டர் நொறுங்கி விழுந்து விபத்துக்குள்ளான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது .
மகாராஷ்டிரா
மகாராஷ்டிரா மாநிலம் புனே மாவட்டத்தில் பவுதான் புத்ருக் என்ற பகுதியில் இன்று காலை வானில் பறந்து கொண்டிருந்த போது திடீரென ஹெலிகாப்டர் கீழே விழுந்து நொறுங்கியது. கீழே விழுந்த சற்று நேரத்தில் ஹெலிகாப்டர் தீப்பிடித்து எரிந்தது.
இந்த சம்பவம் தொடர்பாக அப்பகுதியைக்கள் காவல்துறையினருக்குத் தகவல் தெரிவித்தனர். உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் நிகழ்விடத்தில் சோதனை செய்தனர். இதில் இரண்டு விமானிகள் மற்றும் பொறியாளர் ஒருவர் என 3 உயிரிழந்ததை உறுதி செய்துள்ளனர்.
இதனையடுத்து காவல்துறையினர் நடத்திய முதற்கட்ட விசாரணையில், ஹெலிகாப்டர் டெல்லியைச் சேர்ந்த விமான நிறுவனத்துக்குச் சொந்தமானது எனத் தெரியவந்துள்ளது. மேலும் ஹெலிகாப்டர் விபத்துக்கான சம்பவம் காலை 6.45 மணியளவில் நடந்துள்ளது .
விபத்து
இந்த பகுதி மலைகள் அதிகமாக இருப்பதால் போதுமான வெளிச்சம் இல்லாத காரணத்தால் விபத்து ஏற்பட்டு இருக்கலாம் எனத் தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து விமானிகள் கிரீஷ் குமார் பிள்ளை, பரம்ஜித் சிங் மற்றும் பொறியாளர் பிரிதாம்சந்த் பரத்வாஜ் ஆகிய மூவரும் உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது.தொடர்ந்து அந்த பகுதியில் மீட்புப் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.