2 நாட்களுக்கு கனமழை: கவனமா இருங்க - எச்சரித்த வானிலை ஆய்வு மையம்!

Tamil nadu TN Weather Weather
By Sumathi Dec 19, 2022 10:56 AM GMT
Report

தமிழகத்தில் 21 மற்றும் 22ஆம் தேதிகளில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கனமழை வாய்ப்பு

தெற்கு வங்கக்கடலின் மத்திய பகுதிகளில் நிலவும் காற்றழுத்த தாழ்வுப் பகுதி, இலங்கை கடற்கரையை நோக்கி நகரக்கூடும் என்பதால் 4 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வரும் 21 மற்றும் 22ஆம் தேதிகளில்

2 நாட்களுக்கு கனமழை: கவனமா இருங்க - எச்சரித்த வானிலை ஆய்வு மையம்! | Heavy Rains In Tamilnadu December 21 And 22

தூத்துக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மற்றும் கடலூர் மாவட்டங்களிலும், காரைக்காலிலும் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையின் சில இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும் என கூறப்பட்டுள்ளது. இலங்கை கடலோரப் பகுதிகளை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக் காற்று வீசக்கூடும் என்பதால், மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.