75 வருஷத்திற்குப் பின்.. தத்தளிக்கும் அரபு அமீரகம், தவிக்கும் மக்கள் - துபாய் செஞ்ச தப்பு?
75 ஆண்டுக்கு பிறகு துபாய் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது.
கனமழை
ஐக்கிய அரபு அமீரகம், பஹ்ரைன் உள்ளிட்ட நாடுகளில் புயலுடன் கூடிய கனமழை தீவிர பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. ஓமனில் பெய்த கனமழைக்கு குழந்தைகள் உட்பட 18 பேர் உயிரிழந்துள்ளனர்.
துபாயில் 12 மணி நேரத்தில் 100 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது. இது ஓராண்டு பெய்யக்கூடிய சராசரி மழை அளவு என்றும் கடந்த 75 ஆண்டு காலத்தில் இல்லாத அளவிலான கனமழை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சர்வதேச விமான நிலையத்தில் வெள்ளம் சூழ்ந்துள்ளதால் விமான சேவை முடங்கியுள்ளது. 500-க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து மற்றும் வழிமாற்றம் செய்யப்பட்டுள்ளது. தேவையின்றி மக்கள் யாரும் துபாய் விமான நிலையத்துக்கு வர வேண்டாம் என எச்சரித்துள்ளனர்.
மேக விதைப்பு
இந்நிலையில், சிறப்பு வானிலை ஆய்வாளரான அஹமத் ஹபீப், இதற்கெல்லாம் இயற்கையில் ஏற்பட்ட மனித தலையீடு தான் காரணம். ஐக்கிய அமீரக தேசிய வானிலை மையம் கடந்த திங்கள் மற்றும் செவ்வாய்க்கிழமைகளில்
அல் ஜன் விமான நிலையத்திலிருந்து செயற்கை மழையை வரவழைக்கும் விமானங்களை அனுப்பி வெப்பச்சலன மேக அமைப்புகளை தூண்டி விட்டதன் காரணமாகவே இந்த மழை பெய்துள்ளது. இது முழுக்க முழுக்க மனித தவறு தான் எனத் தெரிவித்துள்ளார்.
More than a year's worth of rain plunges DUBAI unleashing immense flashflood. Airport, metro stations, malls, roads, businesses are inundated with flood waters
— Karnataka Weather (@Bnglrweatherman) April 16, 2024
Dubai International Airport recorded about 160mm of rain in the last 24 hours which is nearly 1.5 yrs avg rainfall in a… pic.twitter.com/dqIBPZlYhT