4 நாட்களுக்கு ருத்ர தாண்டவம் ஆடப்போகும் கனமழை - எங்கெல்லாம் தெரியுமா?
நான்கு நாட்களுக்கு இடி மின்னலுடன் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கனமழை பெய்ய வாய்ப்பு
தமிழகத்தில் கடந்த வாரம் வடகிழக்கு பருவமழைக் காலம் தொடங்கி பல்வேறு மாவட்டங்களில் தொடர்ச்சியாக கனமழை பெய்து வருகிறது.
தொடர்ந்து, வங்கக்கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலத்தினால் பாம்பனில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது. இந்நிலையில், வங்கக்கடலில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவி, அக்டோபர் 22ஆம் தேதி அன்று புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகிறது.
முக்கிய அறிவிப்பு
இதனால் ராமநாதபுரம் மாவட்டத்தில் வரும் வாரத்தில் நான்கு நாட்கள் இடி மற்றும் மின்னலுடன் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகள் பொறுத்தவரை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 33-34° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 25-26° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், விருதுநகர், மதுரை, கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், கடலூர், மயிலாடுதுறை,
தஞ்சாவூர், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம் மற்றும் மதுரை ஆகிய 21 மாவட்டங்களில் அடுத்த 3 மணிநேரத்திற்கு மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.