மிக்ஜாங் புயல் - 2015-ஆம் ஆண்டின் பெருவெள்ளத்தை தாண்டிய மழை - திணறும் சென்னை!!
புயல் தற்போது சென்னைக்கு 110 கிலோமீட்டர் தொலைவில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மிக்ஜாங் புயல்
மிக்ஜாம் புயலின் காரணமாக KTCC பெல்ட் எனப்படும் காஞ்சிபுரம், திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களை பெரிதும் பாதிப்புகளை சந்தித்து வருகின்றன.
நேற்றிரவு துவங்கிய மழை தொடர்ந்து தற்போது வரையிலும் சென்னையின் பல இடங்களில் இடைவிடாது பெய்து வருகின்றது. சென்னை நகரின் அநேக சாலைகள் நீரால் மூடப்பட்டுள்ளன. போக்குவரத்தும் தடை செய்யப்பட்டுள்ளது. மக்கள் வீட்டை விட்டு வெளியே வரமுடியாத கடினமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
வேளச்சேரி பள்ளிக்கரணை மற்றும் அதன் சுற்றுவட்டார இடங்களில் மழை நீர் முட்டிகால் வரை தேங்கி பெரும் இன்னலை மக்களுக்கு அளித்துள்ளது.
வரலாறு காணாத மழை
இந்நிலையில், தான் தற்போது வரை பெய்துள்ள மழையின் அளவு குறித்த தகவலை சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது. அதன்படி சராசரியாக சென்னையில் மழை இதுவரை 34 செ.மீ பெய்துள்ளது.
இது 2015-ஆம் ஆண்டின் மழையை காட்டிலும் பெரிய மழையாகும்.
அந்த ஆண்டு ஏற்பட்ட பெருவெள்ளத்தின் போது கூட மழை 33 செ.மீ தான் மொத்தமாக பதிவான நிலையில், தற்போது இன்னும் இன்று இரவு வரை மழை இருக்கும் என்ற காரணத்தால் மக்கள் பெரும் அச்சத்திற்குள்ளாகி இருக்கின்றார்.