குடை முக்கியம் பிகிலு.. அடுத்த 3 மணிநேரம், இந்த 16 மாவட்டங்களில் கொட்டித்தீர்க்கபோகும் மழை!

Tamil nadu Regional Meteorological Centre
By Vinothini Nov 20, 2023 02:00 PM GMT
Report

தமிழகத்தில் இந்த மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கனமழை

தமிழகத்தில் கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, தென்மேற்கு வங்கக்கடல் கடலோர தமிழகத்தில் அநேக இடங்களிலும், உள் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

heavy rainfall

திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், சென்னை, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர் மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

தொடர் சிகிச்சையில் கேப்டன் விஜயகாந்த்.. இப்போ என்ன நிலைமை? - மருத்துவர்கள் தகவல்!

தொடர் சிகிச்சையில் கேப்டன் விஜயகாந்த்.. இப்போ என்ன நிலைமை? - மருத்துவர்கள் தகவல்!

16 மாவட்டங்கள்

இந்நிலையில், அடுத்த 3 மணி நேரத்திற்கு தமிழகத்தில் உள்ள 16 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதில் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், விழுப்புரம்,

heavy rainfall

அரியலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கடலூர், தஞ்சாவூர், கன்ன்னியாகுமரி ஆகிய 16 மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது.