தமிழகத்தில் இந்த மாவட்டங்களில் வெளுத்துவாங்கப்போகும் கனமழை : எந்தெந்த ஊர் தெரியுமா

By Irumporai Dec 25, 2022 01:33 AM GMT
Report

தமிழகத்தில் இன்று 8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்த தகவலின் படி ,தென்மேற்கு வங்க கடல் பகுதிகளில் நிலவும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் மேற்கு-தென்மேற்கு திசையில் நகர்ந்து இன்று (25ஆம் தேதி) காலையில் இலங்கை கடற்கரை அருகில் நிலவக் கூடும்.

மீண்டும் மழை

அதன் பிறகு மேலும் மேற்கு-தென்மேற்கு திசையில் நகர்ந்து 26ஆம் தேதி காலையில் இலங்கை வழியாக குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளை நோக்கி நகரக்கூடும் என தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் இந்த மாவட்டங்களில் வெளுத்துவாங்கப்போகும் கனமழை : எந்தெந்த ஊர் தெரியுமா | Weather Forecast In Tamilnadu

இதன் காரணமாக  இன்று தூத்துக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை ஆகிய 8 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

வானிலை ஆய்வு மையம் தகவல்

இதேபோல் நாளை கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம், தேனி, தென்காசி, விருதுநகர் மற்றும் (Next) சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.