தொடரும் கனமழை.. 24 மாவட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை - விபரம் இதோ!

Tamil nadu School Children
By Swetha Dec 13, 2024 03:35 AM GMT
Report

கனமழை காரணமாக பள்ளிகள் மற்றும் கல்லுரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

கனமழை

இந்திய பெருங்கடலில் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி நிலவுகிறது. இது மேற்கு திசையில் நகர்ந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெறும். என்று கூறப்பட்டது. அந்த வகையில் நேற்று இடியுடன் கூடிய கனமழை பல மாவட்டங்களில் பெய்தது.

தொடரும் கனமழை.. 24 மாவட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை - விபரம் இதோ! | Heavy Rain These Districts School Colleges Leave

அரியலூர், தஞ்சாவூர், திருவாரூர் மற்றும் புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் கன முதல் மிக கனமழை பெய்யும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், இன்றும் தமிழகத்தின் பல பகுதிகளிலும், கனமழை பெய்து வருகிறது.

கனமழை எதிரொலி.. எந்தெந்த மாவட்டங்களுக்கு பள்ளி கல்லூரி விடுமுறை?

கனமழை எதிரொலி.. எந்தெந்த மாவட்டங்களுக்கு பள்ளி கல்லூரி விடுமுறை?

விடுமுறை 

இதன் காரணமாக பல மாவட்டங்களிலும் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்து, அந்தந்த மாவட்ட கலெக்டர்கள் உத்தரவிட்டுள்ளனர்.  

தொடரும் கனமழை.. 24 மாவட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை - விபரம் இதோ! | Heavy Rain These Districts School Colleges Leave

விழுப்புரம், தூத்துக்குடி, தென்காசி, தஞ்சாவூர், திருநெல்வேலி, திருச்சி, அரியலூர், பெரம்பலூர் ஆகிய மாவட்டங்களுக்கு பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை.  

மதுரை, திண்டுக்கல், சிவகங்கை,விருதுநகர், ராமநாதபுரம்,தேனி, கரூர், கடலூர், புதுக்கோட்டை, மயிலாடுதுறை, சேலம், தருமபுரி, திருவாரூர், நாமக்கல், நாகை, திருப்பூர் ஆகிய மாவட்டங்களுக்கு பள்ளிகள் மட்டும் விடுமுறை.