24 மணி நேரத்தில் 42 இடங்களில் மழை; சென்னையில் அதிகரிக்குமா? பாலச்சந்திரன் எச்சரிக்கை!
24 மணி நேரத்தில் 42 இடங்களில் கனமழை பெய்துள்ளது என பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
பாலச்சந்திரன்
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய வானிலை ஆய்வு மைய தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன், "தென்மேற்கு பருவமழை நிறைவு பெற்று வடகிழக்கு பருவமழை தொடங்கி உள்ளது.
அடுத்த 24 மணி நேரத்தில் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சியில் மிக கனமழை பெய்யும். அடுத்த 4 தினங்களுக்கு தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் பரவலாக மழை பெய்யும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 2 தினங்களுக்கு கன முதல் மிக கனமழை பெய்யும். சென்னையில் இன்று மாலை முதல் மழை அதிகரிக்கக்கூடும்.
அதிகரிக்குமா?
சென்னைக்கு இன்றும், நாளையும் அதிகனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி மற்றும் டெல்டா பகுதிகளிலும் மழைக்கு வாய்ப்புள்ளது.
தெற்கு வங்க கடலின் மத்திய பகுதியில் வலு பெற்றுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு ப்பகுதி, 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும்.
இது மேற்கு, வடமேற்கு திசையில் நகர்ந்து அடுத்த 24 மணி நேரத்தில் வட தமிழ்நாடு , புதுச்சேரி மற்றும் தெற்கு ஆந்திராவை நோக்கி நகரும்" என்று தெரிவித்துள்ளார்.