வெளுத்து வாங்கும் கனமழை - இந்த மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!
மழை காரணமாக தமிழகத்தில் சில மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
கனமழை
திண்டுக்கல், கொடைக்கானல் மலைப்பகுதிகளில் நேற்று மாலையில் வானில் கருமேகங்கள் சூழ்ந்து காற்றுடன் கூடிய மழை சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக பெய்தது.
அப்சர்வேட்டரி, ஏரிச்சாலை, மூஞ்சிக்கல், ஆனந்தகிரி, அண்ணாநகர், உகார்த்தேநகர் உள்ளிட்ட நகர்ப்பகுதிகளிலும் பூம்பாறை, மன்னவனூர், பூண்டி, கீழான வயல் உள்ளிட்ட மலைக்கிராமப்பகுதிகளில் மிதமான மழையாகவும் வேறு
விடுமுறை
ஒரு சில பகுதிகளில் கன மழையாகவும் பெய்தது. இதனால் அம்மாவட்டத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கும் இன்று விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் பூங்கொடி உத்தரவிட்டுள்ளார்.
அதேபோல், கரூரில் பெய்து வரும் கனமழை காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிக்கு இன்று ஒரு நாள் விடுமுறை அளிக்கப்படுகிறது என மாவட்ட நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.