தமிழ்நாட்டில் 9 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

Department of Meteorology
By Thahir Oct 13, 2023 08:25 AM GMT
Report

வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாட்டில் இன்று 9 மாவட்டங்களில் மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இன்று 9 மாவட்டங்களில் மழை

கடந்த சில நாட்களாக சென்னை உள்பட தமிழகத்தின் பல பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம் அந்த வகையில் இன்று வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக கோவை மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் உள்ள பகுதிகளிலும் நீலகிரி, தேனி, திண்டுக்கல், தென்காசி, கன்னியாகுமரி, மதுரை மற்றும் விருதுநகர் ஆகிய பகுதிகளில் ஒரு இடங்களில் கன மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் 9 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு | Today 9 District Chance Of Rain

அதேபோல் மதுரை. விருதுநகர் மாவட்டங்களில் உள்ள சில பகுதிகளில் கன மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னையை பொருத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் சில இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.