வெறும் 15 நிமிடத்தில் 45 மி.மீ மழை; வரலாறு காணாத நிகழ்வு - தத்தளிக்கும் மாநகரத்தின் நிலை என்ன?
மதுரை பகுதியில் 15 நிமிடங்களில் 45 மி.மீ., மழை பதிவாகியுள்ளது.
கொட்டிய கனமழை
மதுரையில் வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்து வருகிறது. கடந்த வாரம் தல்லாகுளத்தில் அதிகளவாக 13 செ.மீ., மழை பெய்துள்ளது. குறிப்பாக நேற்று 15 நிமிடங்களில் 45 மி.மீ., மழை பதிவாகியுள்ளது.
பல இடங்களில் மழைநீர் வாய்க்கால்கள் உடைப்பெடுத்து குடியிருப்புகளில் தண்ணீர் புகுந்து மக்கள் தவித்தனர். ஆனையூர், ஊமச்சிக்குளம், ஆலங்குளம், கண்ணனேந்தல், மூன்றுமாவடி சாலைகளில் போக்குவரத்து ஸ்தம்பித்து வாகனங்கள் பல கி.மீ. வரிசையாக நின்றன.
வங்கக் கடலில் உருவாகிறது புதிய புயல் - தீவிர காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக மாறியது - வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை
ஸ்தம்பித்த மாநகரம்
இந்நிலையில், சீரமைப்பு மற்றும் நிவாரண பணிகளை துரிதப்படுத்த முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். கலெக்டர் சங்கீதாவை தொலைபேசியில் தொடர்பு கொண்டு மீட்பு மற்றும் நிவாரண பணிகள் குறித்து கேட்டறிந்தார்.
பாதிக்கப்பட்டு உள்ள மக்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் துரிதமாக மேற்கொள்ளவும், களத்திற்கு சென்று சீரமைப்பு பணிகளை மேற்கொள்ளவும் அமைச்சர்கள் மூர்த்தி, தியாகராஜன் மற்றும் சங்கீதாவிற்கு முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.