சென்னையில் நேற்று இரவு கொட்டி தீர்த்த மழை - வெள்ளத்தில் மிதந்த கார்கள்
சென்னையில் நேற்று இரவு பெய்த கனமழையால் 2 அடிக்கு மேல் அண்ணாசாலையில் தண்ணீர் தேங்கியதால் போக்குவரத்து பாதிப்பு.
2 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு
தென்னிந்திய பகுதிகளின் மேல் வளிமண்டலத்தின் கீழ் அடுக்குகளில் கீழ் திசையில் கிழக்கு திசை காற்றும் மேற்கு திசை காற்றும் சந்திக்கும் பகுதிகள் நிலவுவதால் அடுத்த 2 தினங்களுக்கு தமிழகத்தில் பல பகுதிகளில் மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது.
இந்த நிலையில் அடுத்த 3 மணி நேரத்திற்கு சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட 18 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என சென்னை வானிலை மையம் தெரிவித்து இருந்தது.
மழைநீர் சூழ்ந்ததால் போக்குவரத்து பாதிப்பு
நேற்று முதல் சென்னையில் மழை விட்டு விட்டு பெய்து வந்தது. இந்த நிலையில் நேற்று இரவு கனமழையானது கொட்டியது.
இதையடுத்து சென்னை அண்ணாசாலையில் உள்ள ஜிபி சாலையில் 2 அடிக்கு மேல் மழைநீர் சூழ்ந்து வெள்ளம் போல் காட்சியளிக்கிறது.
போக்குவரத்து மிகுந்த இந்த சாலை பகுதியில் 2 அடிக்கு மேல் தண்ணீர் சூழந்துள்ளதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.