மக்களே உஷார்.. அடுத்த 3 மணிநேரத்தில் இந்த 29 மாவட்டங்களில் கொட்டித்தீர்க்கபோகும் மழை!
கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வானிலை மையம்
இலங்கை மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் அடுத்த ஒருவாரத்திற்கு மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது அல்லது மிதமான மழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
29 மாவட்டங்கள்
இந்நிலையில், தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 29 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை, செங்கல்பட்டு, காஞ்சி, திருவள்ளூர், வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தருமபுரி, திருவண்ணாமலை, ஈரோடு, சேலம், நாமக்கல், திருவாரூர், தஞ்சை, நாகை, அரியலூர், பெரம்பலூர்,
சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர், மதுரை, குமரி, தென்காசி, தேனி, திண்டுக்கல், கோவை, நீலகிரி ஆகிய மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.