இந்த நேரத்தில் வெளியவே வரக்கூடாது - மிரட்ட வரும் வெப்ப அலை!
தமிழ்நாட்டில் வெப்பநிலை அதிகரித்து வரும் நிலையில் வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது.
வெப்பநிலை
தமிழ்நாட்டில் அக்னி நட்சத்திரம் தொடங்கவில்லை. முதல் கட்டமாக மும்பையில் வெப்ப அலை வீசும். அதன்பின் கோவாவில் வெப்ப அலை வீசும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது . இந்நிலையில், தமிழ்நாட்டில் ஈரோடு, சேலம், நாமக்கல்லில் 100 டிகிரி பாரன்ஹீட்டிற்கு அதிகமாக வெப்பம் பதிவானது.
வரும் நாட்களில் அதிகரிக்கும் எனக் கூறப்படுகிறது. இதனால் சில வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன. அதில், வெயில் அதிகமாக இருக்கும் பிற்பகல் நேரங்களில் மக்கள் வெளியே செல்வதை குறைத்துக்கொள்ள வேண்டும். மதியம் 12 -3 மணி வரை மக்கள் அதிகமாக வெளியே செல்லாமல் வீட்டில் இருக்க வேண்டும்.
நெறிமுறைகள்
உடல் சூட்டை குறைக்கும் உணவுகளை உட்கொள்ள வேண்டும். உடல் சூட்டை அதிகரிக்கும் உணவுப்பொருட்களை குறைத்துக்கொண்டு சூட்டை தணிக்கும் பழங்கள் உள்ளிட்ட பொருட்களை உட்கொள்ள வேண்டும். வெளியில் செல்வதாக இருந்தால் முழுதாக உடலை மறைக்கும் ஆடைகளை அணிய வேண்டும்.
பருத்தி ஆடைகளை பயன்படுத்த வேண்டும். தோலில் எரிச்சல், அதிக சூடு, சூடு கட்டிகள், வாந்தி, மயக்கம் ஏற்பட்டால் மருத்துவரை அணுக வேண்டும்.
குழந்தைகள், வயதானோர், பெண்கள் வெப்ப அலையால் அதிகம் பாதிக்கப்படுவார்கள். இதனால் அவர்கள் முடிந்த அளவிற்கு வீட்டிலேயே இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.