146 ஆண்டுகளில் இல்லாத அதிக வெயில் - ஷாக் தகவல் கொடுத்த வானிலை ஆய்வு மையம்

By Irumporai Mar 01, 2023 07:12 AM GMT
Report


கடந்த 146 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் அதிக அளவு வெப்பநிலை காணப்பட்டதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதிகரித்த வெயில்

மார்ச் மாதம் முடிந்து விட்டாலே வெயிலின் தாக்கம் அதிகரிக்கும் தற்போது வெயிலின் தாக்கம் கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்துள்ளது. இந்நிலையில் 1877ம் ஆண்டுக்கு பிறகு இந்த வருடம் பிப்ரவரி மாதம் வெப்பம் அதிகமாக இருந்ததாக வானிலை ஆய்வு மையம் தகவல் அளித்துள்ளது.

இதுகுறித்து வெளியிடப்பட்ட அறிவிப்பில், சராசரி வெப்பநிலை 27.8 டிகிரி செல்சியஸ் என இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த பிப்ரவரி மாதம் பதிவான வெப்பநிலை 29.54 டிகிரி செல்சியஸாக உள்ளது. இதுவே இதுவரை இருந்த பிப்ரவரி வெப்பநிலையில் அதிகபட்சமாகும். என்று குறிப்பிட்டுள்ளது.

146 ஆண்டுகளில் இல்லாத வெப்பம்

1901க்குப் பிறகு 2006 பிப்ரவரியில் 29.31°C மற்றும் 2016 பிப்ரவரியில் 29.48°C பதிவானதே இதற்குமுன் பதிவான அதிகபட்ச சராசரி வெப்பநிலையாக இருந்திருக்கிறது. இந்த நிலையில் கடந்த 146 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் வெப்பம் அதிகமாக காணப்பட்டது.

இந்த வருடம் பிப்ரவரி மாதம் வெப்பம் அதிகமாக இருந்ததாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. நாட்டின் பல்வேறு பகுதிகளில், வழக்கத்திற்கு மாறாக வெப்பநிலை உயர்ந்துள்ள நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ள மாநிலங்களுக்கு மத்திய அரசு நேற்று அறிவுறுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது