சக்திவாய்ந்த நிலநடுக்கம் - சுனாமி எச்சரிக்கை விடப்பட்டதால் பரபரப்பு!

Tsunami United States of America Earthquake World
By Swetha Dec 06, 2024 07:39 AM GMT
Report

சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது.

நிலநடுக்கம் 

அமெரிக்காவின் வடக்கு கலிபோர்னியா மாகாணத்தில் ஃபெர்ன்டேல் பகுதியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7 ஆக பதிவானது. நிலநடுக்கத்தால் அங்குள்ள கட்டடங்கள் வீடுகள், கடைகளில் என அனைத்தும் குலுங்க தொடங்கியது,

சக்திவாய்ந்த நிலநடுக்கம் - சுனாமி எச்சரிக்கை விடப்பட்டதால் பரபரப்பு! | Heavy Earthquak Strikes In Us Northern California

அங்கிருந்த பொருட்கள் அதிர்ந்து கீழே விழுந்தன. இதனால், அச்சமடைந்த மக்கள் வீடுகளை விட்டு வெளியேறீ ஓடினர், இந்த நிலநடுக்கம் காரணமாக கலிபோர்னியாவில் சுனாமி எச்சரிக்கையும் விடப்பட்டது.

அடுத்து நியூசிலாந்தை உலுக்கிய நிலநடுக்கம் - பீதியில் மக்கள்

அடுத்து நியூசிலாந்தை உலுக்கிய நிலநடுக்கம் - பீதியில் மக்கள்

சுனாமி 

அதுமட்டுமின்றி கடலோர பகுதிகளில் உள்ள உணவகங்களில் இருந்தும் மக்கள் அவசர அவசரமாக வெளியேற்றப்பட்டனர். எனினும் சில மணி நேரத்திலேயே சுனாமி எச்சரிக்கை வாபஸ் பெறப்பட்டது.

சக்திவாய்ந்த நிலநடுக்கம் - சுனாமி எச்சரிக்கை விடப்பட்டதால் பரபரப்பு! | Heavy Earthquak Strikes In Us Northern California

இதனால் அங்குள்ள மக்கள் நிம்மதி பெருமூச்சு விட்டனர். இந்த நிலையில், நிலநடுக்கம் குறித்து அதிபர் ஜோ பைடன் கேட்டறிந்ததாகவும், கலிபோர்னியா மாகாணத்திற்கு தேவையான உதவிகளை வழங்க தயாராக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.