உலகில் 'சொர்க்கத்தின் வாசல்' - செல்வது அவ்வளவு சுலபம் கிடையாது.. எங்குள்ளது தெரியுமா?
உலகில் சொர்க்கத்தின் வாசல் என்று அழைக்கப்படும் இடம் குறித்த தகவல்.
சொர்க்கத்தின் வாசல்
சீனாவின் ஹுனான் மாகாணத்தின் வடமேற்கு பகுதியில் ஜாங்ஜியாஜி என்ற பகுதி உள்ளது. இந்த பகுதியில் தியான்மென் மலை தேசிய பூங்காவில் இருக்கும் மலையில் இயற்கையான ஆர்ச் (Natural arch) உள்ளது.
இந்த பகுதியை தான் சொர்க்கத்தின் வாசல் என்று குறிப்பிடுகின்றனர். இந்த ஆர்ச்சை எட்டி அங்கிருந்து உலகைப் பார்க்கும் தருணம் உடலை சிலிர்க்க வைக்கிறது. குகை வடிவில் இருக்கும் இந்த பகுதி கடல் மட்டத்திலிருந்து 5,000 அடி உயரத்தில் உள்ளது. இப்பகுதியை அவ்வளவு எளிதில் அடைய முடியாது.
999 படிக்கட்டுகள்
இந்த மலைப் பகுதியில் கேபில் கார் அமைக்கப்பட்டுள்ளது. மலைக்கு செல்ல சாலைகளும், கிளாஸ் ஸ்கைவாக்குகளும் அமைக்கப்பட்டுள்ளது. சுமார் 4000 அடி வரை கேபில் கார் மூலம் சென்றடைய முடியும்.
இந்த சொர்க்கத்தின் வாசல் முனைப்பிற்கு செல்ல 'சொர்க்கத்திற்கு செல்லும் படிக்கட்டுகள்' என்று அழைக்கப்படும் 999 படிக்கட்டுகளை கடந்துதான் செல்லமுடியும். இங்கு பல்வேறு நாடுகளில் இருந்து ஒவ்வொரு வருடமும் ஏராளமான மக்கள் வருகை தருகின்றனர்.