ரியல் 'மின்னல் முரளி' 7 முறை மின்னல் தாக்கியும் உயிர் பிழைத்த அதிசயம் - எப்படி இறந்தார் தெரியுமா?

United States of America World
By Jiyath Sep 08, 2023 01:02 PM GMT
Report

7 முறை மின்னல் தாக்கியும் உயிர் பிழைத்த அதிசய மனிதர் குறித்த தகவல்.

அதிசய மனிதர்

ராய் சல்லிவன் என்ற நபர் 1936ம் ஆண்டு தனது 24வது வயதில் அமெரிக்காவின் விர்ஜினியா மாகாணத்தில் உள்ள ஷெனேன்டோ தேசிய பூங்காவில் ரேஞ்சராக பணிபுரிந்து வந்தார். 6 வருடங்கள் கழித்து 1942ம் ஆண்டு ஒரு நாள் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்தது.

ரியல்

பூங்காவில் இருக்கும் கண்காணிப்புக் கோபுரத்தில் ராய் ஒதுங்கிக்கொண்டார். அப்போது கோபுரத்தை மின்னல் பயங்கரமாக தாக்க எங்கும் தீ பரவத் தொடங்கியது. தப்பித்தால் போதும் என அடைமழையில், வெட்ட வெளியில் இறங்கி ஓடினார் ராய். எதிர்பாராவிதமாக, அவரை மின்னல் தாக்கியது. இதில் ராயின் வலது காலின் ஒரு பகுதி கருக, கால் பெரு விரலின் நகம் பிய்த்துக்கொண்டு போனது.

பின்னர் 1969ம் வருடம் பெருமழை, இடி மின்னல் என்று பெய்யத் தொடங்கியவுடன், தனது டிரக்கில் ஏறிப் பதுங்கிக் கொண்டார் ராய். அப்போது வேகமாகப் பூமியில் இறங்கிய மின்னல் ஒன்று, டிரக்கின் அருகே இருந்த மரத்தில் இறங்கியது. அங்கிருந்து பிரதிபலிக்கப்பட்ட அது, கண்ணாடி திறந்திருந்த டிரக்கின் உள்ளே புகுந்து ராய் அவர்களைத் தாக்கியது. அவர் தலை தீப்பிடித்து எரிய, புருவங்கள் மொத்தமாக எரிந்துப் போனது.

ரியல்

இதைத் தொடர்ந்து 1970ம் ஆண்டு தன் வீட்டின் முன்புறம் நின்றிருந்தார் ராய். வேகமாக வெட்டிய மின்னல், அவர் வீட்டின் அருகே இருந்த ட்ரான்ஸ்ஃபார்மர் ஒன்றைத் தாக்கியது. அதிலிருந்து சிதறிய மின்னல், இவரின் இடது தோளை தாக்கியது. மேல் சதை கிழிந்ததோடு தப்பினர் ராய். 1972ம் ஆண்டு, ஷெனேன்டோ தேசியப் பூங்காவில் தன் ரேஞ்சர் அலுவலகத்தில் இருந்தார் ராய்.

அப்போது அவரை மின்னல் தாக்க, வழக்கம்போல அவரது தலை தீப்பிடித்துக்கொண்டது. அந்த நிகழ்வுக்குப் பிறகு, இடி, மின்னல், மழை என்றால் ராய் மிகவும் பயப்படத் தொடங்கினார். ஏதோ, துஷ்டச் சக்தி தன்னை அழிக்க நினைப்பதாக நினைத்துக் கவலை கொண்டார் ராய் . 1973ம் ஆண்டு பூங்காவில் ரோந்துப் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார் ராய். மழை பெய்வதுபோல் கருமேகம் சூழ, முன்னெச்சரிக்கையாகத் தனது டிரக்கை எடுத்துக்கொண்டு பாதுகாப்பான இடத்தை நோக்கி சீறிப் பாய்ந்தார்.

ரியல்

டிரக்கை நிறுத்தி கீழே இறங்கிய அடுத்த வினாடியே மின்னல் அவர் தலையில் இறங்கியது. இந்த முறை கொஞ்சம் வீரியம் அதிகம். ராய் நின்ற இடத்தில் இருந்து தூக்கி எறியப்பட்டார். தலை தீப்பிடித்து எரிந்தது. நடக்க முடியாத நிலை வேறு ஏற்பட்டது. எனவே, அப்படியே தவழ்ந்து, தனது டிரக்கில் எப்போதும் வைத்திருக்கும் கேன் நீரைத் தலையில் ஊற்றிக் கொண்டார்.

1976ம் வருடம் ஒரு கருமேகம் அவரை துரத்தியதாகவும், ஒளிய எங்கேயும் இடம் இல்லாமல் போனதால், மின்னல் அவரைத் தாக்கியது. இந்த முறை அவரின் கணுக்கால் பலத்த காயம் அடைந்தது. இறுதியாக 1977ம் ஆண்டு, ஒரு குளத்தில் மீன்பிடித்துக்கொண்டு இருந்தார் ராய். மின்னல் அவரின் மேல் இறங்கியது. தலையும் தீப்பிடித்து எரியத் தொடங்கியது. இதிலிருந்தும் தப்பித்துள்ளார் ராய்.

காதல் தோல்வியால் தற்கொலை

இதுகுறித்த நேஷனல் ஜியோக்ராஃபிக் நிறுவனத்தின் ஆய்வின் படி, மின்னல் தாக்கப்பட்டவர்களில், சராசரியாக 10 முதல் 30 சதவிகிதம் பேர் மட்டுமே இறக்கின்றனர். அதேபோல் அமெரிக்காவில் 3000த்தில் ஒருவரை தான் மின்னலே தாக்குகிறது.

ரியல்

மின்னல் ராய் சல்லிவன் அவர்களைச் சற்று அதிகமாகவே தாக்கியது என்றாலும், அவர் இறந்து போகும் அளவுக்குக் கொடூரமான மின்னல் ஒரு போதும் அவரை நெருங்கவில்லை என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள். ஏழு முறை மின்னல் தாக்கியும் பிழைத்தால், உலகிலேயே அதிக முறை மின்னல் தாக்கிய மனிதர் என்று கின்னஸ் உலக சாதனையில் இடம்பெற்றார் ராய் சல்லிவன்.

ஆனால் இத்தனை முறை மின்னலை நேருக்கு நேர் தைரியமாக எதிர்கொண்டவர் தனது 71வது வயதில் காதல் தோல்வியால் துப்பாக்கியை எடுத்து தன்னைத் தானே சுட்டுக் கொண்டு இறந்துள்ளார்.