இந்த 20 நாட்களில் வெளியே வராதீங்க.. எச்சரிக்கும் வானிலை மையம்!
வெப்ப அலை குறித்து வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
வெப்ப அலை
நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் வரும் ஜூன் மாதம் வரை கடுமையான மற்றும் வறண்ட கோடைக்காலம் நிகழ்வது வழக்கம்.
அதன்படி, மத்தியப் பிரதேசம், வடக்கு மற்றும் கடலோர மகாராஷ்டிரா, கர்நாடகா, கேரளா, லட்சத்தீவு, அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள், தெலுங்கானா, ஆந்திரப் பிரதேசம் மற்றும் ஒடிசாவில் ஏப்ரல் மாதத்தில் பகலில் வெப்பம் அதிகமாகவே இருக்கும்.
பருவமழைக்கு முந்தைய மழை இந்த மாதம் சராசரியை விடக் குறைவாக இருக்கும். இந்தியாவில் மழை குறைவாகவே இருக்கும். இதனால் முன்னதாகவே வறண்ட நிலை தொடர்கிறது. இந்நிலையில், அடுத்த மூன்று மாதங்களில் 10 முதல் 20 நாட்கள் வரை வெப்ப அலை நீடிக்கும்.
எச்சரிக்கை
பருவமழைக்கு முந்தைய மழை பெரும்பாலான பகுதிகளில் இயல்பை விடக் குறைவாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வறட்சி மற்றும் தண்ணீர் பற்றாக்குறையும் ஏற்படும். ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலகட்டத்தில் வெப்பம் வழக்கத்தை விட அதிகமாக இருக்கும்.
ராஜஸ்தான், குஜராத், சௌராஷ்டிரா-கட்ச், மகாராஷ்டிரா, வடக்கு கர்நாடகா, ஆந்திரப் பிரதேசம் மற்றும் ஒடிசா ஆகிய பகுதிகளில் கோடைக் காலங்களில் வெப்ப அலை அதிகம் வீசும்.
கடந்த பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில், தென் இந்தியாவில் இயல்பான வானிலையை விட வெப்பம் அதிகமாக இருந்தது. அதிகபட்ச வெப்பநிலை 42.6 டிகிரி செல்சியஸை எட்டி இருந்ததாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.