மக்களே கவனம்; வெப்ப அலை வீசும் - அதிக வெப்பத்தில் முதல் இடம் எதற்கு தெரியுமா?

Tamil nadu TN Weather
By Sumathi Apr 24, 2024 03:48 AM GMT
Report

இன்று வெப்ப அலை வீசும் என வானிலை மையம் எச்சரித்துள்ளது.

வெப்ப அலை 

தமிழ்நாட்டில் கோடை தொடங்கி வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால், நேற்று 15 இடங்களில் வெயில் கொளுத்தி எடுத்தது.

tn weather

இதில், அதிகபட்சமாக சேலத்தில் 108 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவானது. ஈரோட்டில் 107 டிகிரி பாரன்ஹீட் பதிவானது. மேலும், மதுரை, தருமபுரி, நாமக்கல், திருச்சி, திருத்தணி, கோவை, நெல்லை, தஞ்சாவூர் மற்றும் சென்னையில் 100 டிகிரி பாரன்ஹீட்டுக்கு மேல் வெப்பம் பதிவாகியுள்ளது.

இந்த நேரத்தில் வெளியவே வரக்கூடாது - மிரட்ட வரும் வெப்ப அலை!

இந்த நேரத்தில் வெளியவே வரக்கூடாது - மிரட்ட வரும் வெப்ப அலை!

வானிலை மையம் எச்சரிக்கை

இந்நிலையில், ஒரு சில இடங்களில் வரும் 27-ஆம் தேதி வரை இயல்பை விட 2 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் அதிகமாக இருக்கக் கூடும். குறிப்பாக, வட தமிழ்நாடு மற்றும் உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று வெப்ப அலை வீசக்கூடும்.

மக்களே கவனம்; வெப்ப அலை வீசும் - அதிக வெப்பத்தில் முதல் இடம் எதற்கு தெரியுமா? | Heat Wave Alert Today In Tamilnadu

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை 98.6 டிகிரி பாரன்ஹீட் ஆக இருக்கும் என வானிலை மையம் எச்சரித்துள்ளது.

இதனைத் தொடர்ந்து, நண்பகல் 12 முதல் மாலை 3 மணி வரை மக்கள் தேவையின்றி வெளியே செல்வதை தவிர்க்க வேண்டும் என்று நாமக்கல், சேலம், வேலூர், கரூர் உள்ளிட்ட மாவட்ட ஆட்சியர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.