தொடர்ந்து வீசிவரும் வெப்ப அலை; ஆயிரக்கணக்கானோர் பலி - கொடூரமாகும் எதிர்வரும் நாட்கள்!
ஐரோப்பிய பிராந்தியத்தில் வீசிவரும் வெப்ப அலை காரணமாக காட்டுத் தீ ஏற்பட்டுள்ளது.
காட்டுத் தீ
ஐரோப்பிய பிராந்தியத்தில் கடந்த சில நாட்களாக வீசிய வெப்ப அலை காரணமாக தெற்கு பகுதிகளில் காட்டுத் தீ பரவி வருகிறது. கிரீஸின் முக்கிய பகுதிகளும் இதில் அடங்கும்.
சர்பரஸ் என்று பெயரிடப்பட்டுள்ள எதிர்ப்புயல் காரணமாக அங்கு வெப்ப அலை வீசி வருகிறது. இந்த வெப்ப அலைக்கு கேரன் என்று பெயரிடப்பட்டுள்ளது. அந்த நாட்டின் டெர்வேனோசோரியாவில் ஏற்பட்டுள்ள காட்டுத் தீதான் மோசமாகப் பரவி வருகிறது. அந்த பகுதியிலிருந்து வெளியாகும் புகை செயற்கைகோள்களில் படமாக தெரியும் அளவிற்கு தீவிரமாக உள்ளது.
இத்தாலியில் உள்ள சார்டினா என்ற தீவில் வெப்பநிலையில் அளவு 114.8 டிகிரி வரை அதிகரிக்கும் என்று சொல்லப்படுகிறது. மற்றொரு ஐரோப்பிய நாடான ஸ்பெயினில் கடந்த செவ்வாய்க் கிழமை வெப்ப அலை 112.2 டிகிரி பதிவாகி உள்ளது. கடந்த 2003ஆம் ஆண்டு வீசிய வெப்ப அலைக்கு ஐரோப்பாவில் 7000 பேர் பலியாகியுள்ளனர்.
கடந்த ஆண்டு இதேபோல் ஏற்பட்ட வெப்ப அலைக்கு 62000 பேர் பலியாகியுள்ளனர்.
எச்சரிக்கை
இதிலிருந்து பொதுமக்களை காப்பாற்ற இத்தாலி அரசு அங்குள்ள 16 முக்கிய நகரங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. காட்டுத் தீயை அனைக்கும் பணிகளுக்கு உதவியாக கிரீஸ் நாட்டிற்கு ஐரோப்பிய யூனியன் ஹெலிகாப்டர்களை அனுப்பியுள்ளது.
பொதுவாக அதிக வெப்ப அலையால் வியாதிகள்,உடல்நலக் குறைவுகள் உள்ளவர்களுக்கு தான் உயிரிழப்பு ஏற்படும். ஆனால் தற்போது வீசக்கூடிய வெப்ப அலையால் ஆரோக்கியமான மனிதர்கள் கூட இறக்கும் அபாயம் இருப்பதாக கூறப்படுகிறது.