கொரிய பெண்களை போல் கிளாஸி ஸ்கின் வேண்டுமா? இந்த 5 விஷயத்தை தெரிஞ்சுக்கோங்க!
சருமத்தை பிரகாசமாக்கும் பழக்கவழக்கங்கள் குறித்து தெரிந்துகொள்வோம்.
கிளாஸி ஸ்கின்
தெளிவான, பளபளப்பான மற்றும் புள்ளிகள் இல்லாத கண்ணாடித் தோலை அனைவரும் விரும்புகின்றனர். அதற்காக பலரும் கடைகளில் தயாரிக்கப்படும் சில தயாரிப்புகள் மற்றும் பேக்குகளை உபயோகிக்கின்றனர்.
அது நிரந்தர பிரகாசத்தை தராது என நாம் அறிந்ததே. எனவே, சருமத்தை உள்ளிருந்து பிரகாசமாக்க, 5 ஆரோக்கியமான பழக்கவழக்கங்களை பின்பற்ற வேண்டும். என்னவென்றால், கண்ணாடி போன்ற தோலை பெற நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும்.
என்ன செய்யலாம்?
நீரேற்றம் உங்கள் சருமத்தை ஆரோக்கியமாக வைத்திருப்பதோடு மட்டுமல்லாமல், சுருக்கங்களை குறைக்கிறது. பாதாம் சாப்பிடுவதன் மூலமும் சரும சுருக்கங்களை குறைக்கலாம்.
கேரட், தக்காளி மற்றும் இலை கீரைகள் ஆகியவற்றை தொடர்ந்து சாப்பிடுவதன் மூலம், தோலில் ஏற்படும் நிறமாற்றத்தைக் குறைக்கலாம். சால்மன் போன்ற கடல் உணவுகளில் காணப்படும் ஒமேகா-3 ஃபாட்டி ஆசிட்கள், இளமை தோற்றத்தை தக்கவைக்கிறது.
சிவப்பு திராட்சையை ஓட்ஸில் சேர்த்து சாப்பிடலாம். இதன்மூலம் வயதாகும் அறிகுறியை தாமதப்படுத்தலாம். 7 முதல் 8 மணிநேரம் சிறந்த தூக்கத்தை மேற்கொள்ள வேண்டும். படுக்கையில் மொபைல் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும். மன அழுத்தத்தை குறைக்க யோகா அல்லது தியானத்தை முயற்சி செய்யலாம்.