குளிர்காலத்தில் உடல் சோர்வா இருக்கா? இந்த 6 உணவுகள் சாப்பிட்டா போதும்- Note பண்ணுங்க பா!
குளிர்காலத்தில் உங்கள் உடலை ஆரோக்கியமாக வைத்திருக்கும் உணவுகள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
குளிர்காலம்
குளிர்காலத்தில் நமது உடல் மந்தமான உணர்வுடன் காணப்படுகிறது. இது பெரும்பாலும் வானிலையில் மாற்றங்கள், உணவுப் பழக்கவழக்கம், வேலையில் ஏற்படும் மன அழுத்தம் போன்ற காரணங்களால் ஏற்படுகிறது.
ஆனால் இந்த காலகட்டத்தில் சரியான உணவைச் சாப்பிட்டால், குளிர்காலத்தில் கூட நீங்கள் எனர்ஜியாக இருக்க முடியும் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். குறிப்பாக இந்த 6 உணவுகள் போதும் .வாழைப்பழம் ஆற்றலுக்குச் சிறந்த உணவாக இருக்கிறது.
பொட்டாசியம், நார்ச்சத்து மற்றும் ஆரோக்கியமான கார்போஹைட்ரேட்டுகள் நிறைந்துள்ளன.குளிர்காலத்தில் சோம்பேறித்தனமாக உணர்ந்தால் வாழைப்பழம் எடுத்துக் கொள்ள வேண்டும். இதன் மூலம் புத்துணர்ச்சியுடனும், சுறுசுறுப்பாகவும் இருக்க முடியும்.
உணவுகள்
ஓட்ஸில் நார்ச்சத்து மற்றும் ப்ரோடீன் நிறைந்துள்ளதால், அவை மெதுவாக ஜீரணிக்கப்படுகின்றன.ஒரு கப் ஓட்ஸ் உடன் உங்கள் நாளை தொடங்குவதன் மூலம், நீங்கள் உற்சாகமாக இருக்க உதவும்.அதன் பிறகு, கோழி, முட்டை, மீன், பருப்பு வகைகள் மற்றும் டோஃபு ,நட்ஸ் ,சீட்ஸ் போன்ற லீன் ப்ரோடீன்களை உணவுகளைச் சேர்த்துக்கொள்ள வேண்டும்.
இவை நாள் முழுவதும் சுறுசுறுப்பையும், ஆற்றலையும் வழங்க உதவுகிறது. மேலும் இதில் மிகவும் முக்கியமானது தண்ணீர் . குளிர்காலத்தில் தாகம் எடுக்காவிட்டாலும், போதுமான அளவு தண்ணீர் குடிப்பது அவசியம் ஆகும்.