டாக்டர்கள் சரியான நேரத்திற்கு பணிக்கு வரவேண்டும் - சுகாதாரத்துறை அதிரடி!

Tamil nadu Chennai
By Sumathi Jul 05, 2023 08:12 AM GMT
Report

அரசு மருத்துவர்கள், குறித்த நேரத்திற்கு பணிக்கு வருவது குறித்து சுகாதாரத்துறை செயலாளர் கடிதம் எழுதியுள்ளார்.

சுகாதாரத்துறை செயலாளர் 

சுகாதாரத்துறை செயலாளர் ககன்தீப் சிங் பேட்டி அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில், “அரசு மருத்துவமனை மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணியாற்றும் மருத்துவர்கள் சரியான நேரத்தில் பணிக்கு வர வேண்டும்.

டாக்டர்கள் சரியான நேரத்திற்கு பணிக்கு வரவேண்டும் - சுகாதாரத்துறை அதிரடி! | Health Secretary Write Letter District Collector

அரசு மருத்துவமனை முதல்வர்கள், இயக்குநர்கள், சுகாதாரப் பணியாளர்கள் புறநோயாளிகளுக்கான நேரத்தை கட்டாயமாகக் கடைப்பிடிக்க வேண்டும்.

பணி நேரம் 

புறநோயாளிகள் பிரிவில் பணியாற்றும் பொறுப்பு மருத்துவர்கள் காலை 7.30 மணி முதல் பிற்பகல் 12 மணி வரை கட்டாயம் பணியில் இருக்க வேண்டும். பிற மருத்துவர்கள் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை பணியில் இருப்பது அவசியமாகும்.

மருத்துவர்கள் உரிய நேரத்தில் பணியில் இருப்பதை மாவட்ட ஆட்சியர்கள் உறுதி செய்ய வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.