அரசு மருத்துவர்கள் கிளினிக் வைக்க தடை!
தெலங்கானா மாநிலத்தில் அரசு புதிதாக நியமிக்கும் மருத்துவர்கள் இனி தனியாக கிளினிக் வைக்க கூடாது என அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
தெலங்கானா அரசு
தெலங்கானா மாநில அரசு, அரசு மருத்துவர்களுக்கு நிபந்தனை விதித்துள்ளது. பொதுவாக அரசு மருத்துவமனைகளில் பணிபுரியும் பெரும்பாலான மருத்துவர்கள் தனியார் மருத்துவ மனைகளிலும், கிளினிக் மருத்துவம் பார்க்கின்றனர்.
இந்நிலையில் அரசு மருத்துவர்கள் இனி தனிப்பட்ட முறையில் மருத்துவ சேவை செய்யக் கூடாது என்று சுகாதாரத் துறை அரசானை வெளியிட்டுள்ளது.
அரசாணை வெளியீடு
இந்த அரசாணை மூலம் புதிதாக அரசு மருத்துவர்களாக பணியில் சேருபவர்கள் இனி தனிப்பட்ட முறையில் மருத்துவம் செய்ய முடியாது என தெளிவுபடுத்தியுள்ளனர்.
எனினும், ஏற்கனவே பணியில் உள்ள மருத்துவர்கள் தனிப்பட்ட பயிற்சியில் ஈடுபடலாம். அவர்களுக்கு எந்த தடையும் விதிக்கப்படவில்லை என தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.
தெலுங்கானா மாநிலத்தில் மருத்துவர்கள், பணியாளர் செவிலியர்கள், ஏஎன்எம்கள் மற்றும் துணை மருத்துவ பணியாளர்களை நியமிக்க தெலுங்கானா அரசு முடிவு செய்துள்ளது.
இந்நிலையில் பணி நியமன வழிகாட்டுதல்களில் அரசு மருத்துவர்களின் தனியார் மருத்துவப் சேவையை ரத்து செய்வது குறித்து குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், ரங்காரெட்டி மாவட்ட மருத்துவ அதிகாரிகளுடன் அமைச்சர் ஹரீஷ் ராவ் திங்கள்கிழமை ஆய்வு நடத்தினார். தெலுங்கானா மருத்துவம் மற்றும் சுகாதாரத் துறையில் மொத்தம் 12,755 பணியிடங்கள் காலியாக உள்ளன.
முதற்கட்டமாக 1,326 பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியிடப்படும் என அமைச்சர் ஹரீஷ் ராவ் தெரிவித்தார். இது தொடர்பான அறிவிப்பை வெளியிட மருத்துவ வாரியத்துக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், அரசு மருத்துவர்களின் தனியார் பயிற்சிக்கு அரசு விதித்துள்ள கட்டுப்பாடு குறித்து அமைச்சர் ஹரிஷ் ராவ் குறிப்பிட்டு இந்த விதிமுறையை பின்பற்றாத மருத்துவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தார்.