முன்னாள் முதல்வர் ஓபிஎஸ்'க்கு திடீர் உடல்நல குறைவு..!
அதிமுகவின் முன்னாள் ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ்'ஸிற்கு திடீர் உடல் நல குறைவு ஏற்பட்டுள்ளது.
உடல்நலம்
நெல்லையில் தொண்டர்களை சந்திக்க சென்ற முன்னாள் முதலமைச்சர் ஓபிஎஸ்'க்கு திடீர் தலை சுற்றல் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக, தொண்டர்களை சந்திக்கும் கூட்டத்தில் அவர் கலந்து கொள்ளவில்லை.
அவருக்கு பதிலாக கூட்டம் ஓபிஎஸ் அணியை சேர்ந்த வைத்தியலிங்கம் மற்றும் மனோஜ் பாண்டியன் முன்னிலையில் நடைபெற்றது. அவர் நேரில் சென்று பரிசோதித்த மருத்துவர்கள் அவரை ஓய்வு எடுக்கும் படி அறிவுறுத்தியிருக்கின்றனர்.
முன்னதாக, கட்சியில் இருந்து வெளியேற்றப்பட்ட ஓபிஎஸ் தனது ஆதரவாளர்களை கடந்த டிசம்பர் மாதம் முதல் சந்தித்து, நாடாளுமன்ற தேர்தலுக்கான ஆயுத்த பணிகளில் தீவிரம் காட்டி வருகின்றார்.
பாஜக கூட்டணியில் போட்டியிடவுள்ள ஓபிஎஸ் தரப்பு அதிமுகவை மீட்டெடுக்க வேண்டும் என்ற நோக்கிலும் தொடர்ந்து செயலாற்றி வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.