70 வயது கடந்தவரா நீங்கள்? ரூ.5 லட்சம் வரும் - எப்படி இணைவது தெரியுமா!
ஹெல்த் இன்சூரன்ஸ் திட்டத்தை 70 வயதுக்கு மேற்பட்ட குடிமக்களுக்கு விரிவுபடுத்தவுள்ளனர்.
ஹெல்த் இன்சூரன்ஸ்
பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. அதில், 70 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு வழங்கும் திட்டத்துக்கு ஒப்புதல் வழங்கப்பட்டது.
‘சமூக – பொருளாதார வேறுபாடுகளுக்கு அப்பாற்பட்டு, நாட்டில் உள்ள 70 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் அனைவருக்கும், வருமானத்தை கணக்கில் கொள்ளாமல் இந்த காப்பீட்டு திட்டம் பொருந்தும்.
அரசு ஒப்புதல்
இத்திட்டத்தின்கீழ் ஏற்கெனவே காப்பீடு வசதி பெற்றிருக்கும் பொருளாதாரத்தில் பின்தங்கிய குடும்பத்தில் உள்ள 70 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஆண்டுக்கு கூடுதலாக ரூ.5 லட்சம் காப்பீடு வழங்கப்படும். தனியார் காப்பீட்டு திட்டங்கள், ஊழியர்களின் மாநில காப்பீட்டு திட்டங்களில் பயன்பெறும் மூத்த குடிமக்களும் இதை பயன்படுத்திக் கொள்ளலாம்' என மத்திய அரசு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த திட்டத்தால் 4.5 கோடி குடும்பங்களில் உள்ள 6 கோடி மூத்த குடிமக்கள் பயன்பெறுவார்கள். மேலும், மின்வாகன தயாரிப்பை ஊக்குவிக்க அடுத்த 2 ஆண்டுகளுக்கு, ‘இ-டிரைவ்’ திட்டத்தின்கீழ் ரூ.10,900 கோடி நிதி. 24.79 லட்சம் இருசக்கர மின் வாகனங்கள், 3.16 லட்சம் மூன்று சக்கர மின் வாகனங்கள், 14,028 மின் பேருந்துகளுக்கு இத்திட்டத்தின்கீழ் மானியம்.
புதுப்பிக்கத்தக்க எரிசக்தி கட்டமைப்பை உருவாக்க ரூ.12,461 கோடி, கிராமப்புற போக்குவரத்து கட்டமைப்பை மேம்படுத்த 2024-25 முதல் 2028-29 நிதி ஆண்டு வரை ரூ.70,125 கோடி திட்டத்திற்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.