வேகமாக சாப்பிடும் பழக்கம் உங்களுக்கு இருக்கா? உஷாரா இருங்க - இந்த ஆபத்து வரலாம்!
வேகமாகச் சாப்பிடுவதால் ஏற்படும் உடல் நலப் பிரச்சினைகள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
உணவு முறை
ஆரோக்கியமான வாழ்க்கைக்கு மிகவும் உணவு முறை தான். அதிலும் வேலைக்குச் செல்லும் பலர் அவசரமாகவும், விரைவாகவும் சாப்பிட்டுச் செல்லும் பழக்கம் உண்டு. இவ்வாறு செய்வதால் ஆரோக்கியத்தில் பிரச்சனை ஏற்படுத்தும் ஆபத்து உள்ளது. இது குறித்து விரிவாகப் பார்க்கலாம்.
விரைவாகச் சாப்பிடுவது நேரத்தை மிச்சப்படுத்த முடியும். ஆனால் 10 நிமிடங்களில் அல்லது அதற்கும் குறைவான நேரத்தில் உணவைச் சாப்பிடுவதால் வளர்சிதை மாற்றம், செரிமானத்தில் பாதிப்பை ஏற்படுத்தும்.
மேலும் உணவுகளைச் சரியாக மென்று சாப்பிடவில்லை என்றால் அஜீரணம், வீக்கம் ஏற்படுவதோடு வயிற்று வலியை உண்டாக்கும்.எடை அதிகரிப்பு, இரத்த சர்க்கரை அளவு அதிகரிப்பு போன்ற காரணங்களால், இதய நோய்கள் ஏற்படும் வாய்ப்பு அதிகரிக்கிறது.
பிரச்சினை
தொடர்ந்து வேகமாகச் சாப்பிடுவதால் வயிற்றில் அதிக அமிலத்தை உற்பத்தி செய்கிறது.இது அசௌகரியம் மற்றும் நெஞ்செரிச்சலுக்கு வழிவகுக்கும்.வேகமாகச் சாப்பிடுவதால், இரத்தத்தில் சர்க்கரை அளவு திடீரென அதிகரித்துக் குறையும்.
இது நீண்ட காலத்தில் நீரிழிவு நோய்க்கு வழிவகுக்கும். சாப்பிடும் போது மற்ற எண்ணங்களில் ஈட்டுப்பட்டு இருந்தால் மன அழுத்தத்தை அதிகரிக்கும். இது உணவு செரிமானத்தைப் பாதித்து, பல்வேறு உடல் நலப் பிரச்சினைகளை ஏற்படுத்தும்.