42 நாளில் 720 பேர் பாதிப்பு...தமிழகத்தில் தலையோங்கும் டெங்கு - சுகாதாரத்துறை முக்கிய அறிவிப்பு!

Tamil nadu Karnataka Office of Public Health
By Swetha Jul 15, 2024 04:53 AM GMT
Report

கடந்த 42 நாட்களில் 720 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

டெங்கு பாதிப்பு

தென்மேற்கு பருவமழை காலம் தற்போது தொடங்கியுள்ளது. இதனால் டெங்கு உள்ளிட்ட நோய்கள் பரவ தொடங்கி இருக்கிறது. குறிப்பாக கர்நாடகாவில் டெங்கு பரவல் அதிகரித்து வருகிறது. இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்து தற்போது வரை 9 ஆயிரம் பேர் டெங்குவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

42 நாளில் 720 பேர் பாதிப்பு...தமிழகத்தில் தலையோங்கும் டெங்கு - சுகாதாரத்துறை முக்கிய அறிவிப்பு! | Health Departments Letter Regarding Dengue Prevent

அதில் 7 பேர் பலியாகி உள்ளனர். கர்நாடகா அண்டை மாநிலமாக இருப்பதாக தமிழக -கர்நாடகா எல்லையில் கண்காணிப்பு என்பது தீவிரமாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கடந்த மே மாதம் 31ம் தேதி வரை தமிழகத்தில் 4 ஆயிரத்து 834 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளள்ளனர்.

கடந்த 42 நாட்களில் 720 பேர் வரை பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த வகையில், தான் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்புத்துறை இயக்குநர் செல்வ விநாயகம் சார்பில் தமிகத்தில் உள்ள அனைத்து மாவட்ட சுகாதாரத்துறை அலுவலர்களுக்கு முக்கிய கடிதத்தை அனுப்பி உள்ளார்.

அதில், காய்ச்சல் மற்றும் டெங்கு பரவுவதைத் தடுக்க கண்காணிப்பு மற்றும் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை வலுப்படுத்த அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது. கர்நாடகாவில் டெங்கு பாதிப்பு அதிகமாக பதிவாகியுள்ளன.

மக்களே உஷார்...வேகமாக பரவும் டெங்கு காய்ச்சல் - சுகாதாரத்துறையின் முக்கிய எச்சரிக்கை !

மக்களே உஷார்...வேகமாக பரவும் டெங்கு காய்ச்சல் - சுகாதாரத்துறையின் முக்கிய எச்சரிக்கை !

சுகாதாரத்துறை

எனவே, தமிழகத்தின் எல்லையோர மாவட்டங்களில் அனைத்து தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும். எல்லையோர மாவட்டங்களில் டெங்கு பாதிப்புகளை தடுக்க காய்ச்சல் கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும்.

42 நாளில் 720 பேர் பாதிப்பு...தமிழகத்தில் தலையோங்கும் டெங்கு - சுகாதாரத்துறை முக்கிய அறிவிப்பு! | Health Departments Letter Regarding Dengue Prevent

தமிழகத்தில் அனைத்து பகுதிகளிலும் பருவமழை பெய்து வருவதையும், கர்நாடக மாநிலத்தில் டெங்கு காய்ச்சல் பரவி வரும் சூழலில் தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். எல்லையோர மாவட்டங்களில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்கள், கிளினிக்குகள்,

அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகள் காய்ச்சல் கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும். டெங்கு பாதிப்பு அதிகம் உள்ள பகுதிகளில் கூடுதலாக மருத்துவர்கள் மற்றும் பணியாளர்களை நியமிக்க வேண்டும். பொது சுகாதாரத்தை உருவாக்கும் வகையில் சிறப்பு தூய்மை முகம் அமைத்து சுத்தம் செய்வதுடன் அது குறித்து

முக்கிய அறிவிப்பு

விழிப்புணர்வையும் ஏற்படுத்த வேண்டும். உள்ளாட்சி நிர்வாகத்துடன் இணைந்து காலி இடங்களில் உள்ள தேவையற்ற பொருட்களை அகற்றுவதுடன் கொசு உற்பத்தி ஆகாமல் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். டெங்குவை கண்டுபிடிப்பதற்கான கருவிகள் போதுமான அளவு இருப்பு வைத்திருப்பதை உறுதி செய்வதுடன்

42 நாளில் 720 பேர் பாதிப்பு...தமிழகத்தில் தலையோங்கும் டெங்கு - சுகாதாரத்துறை முக்கிய அறிவிப்பு! | Health Departments Letter Regarding Dengue Prevent

அவசர காலங்களில் தேவைப்படும் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவமனையில் பிளேட்லெட் மாற்றத்திற்கான பிளாஸ்மா பிரிப்பான் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். இதனால் காய்ச்சல், டெங்கு இறப்புகளை தவிர்க்க முடியும்.

பள்ளி மாணவர்கள் மற்றும் குடியிருப்புகளுக்கு சுகாதாரக் கல்வி குறித்தும் தங்கள் வீடுகள் மற்றும் வளாகங்களை கொசு உற்பத்தி இல்லாமல் வைத்திருக்க வேண்டும் என்ற விழிப்புணர்வையும் ஏற்படுத்த வேண்டும்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.