நீண்ட ஆயுளோடு வாழ ஆசையா? ரொம்ப இல்ல.. ஒரு நாளில் இவ்வளவு தூரம் நடந்தா போதும்!
நடைபயிற்சி குறித்து முக்கிய தகவல் வெளியாகியுள்ளது.
நடைபயிற்சி
போலந்தில் உள்ள லாட்ஸ் மருத்துவ பல்கலைக்கழகம் சுமார் 2,27,000 பேரின் தரவுகளை வைத்து ஆய்வு ஒன்றை நடத்தியது. இந்த ஆய்வு முடிவுகளின்படி, இதய ஆரோக்கியம், மனச்சோர்வு, சோர்வை நீக்குதல்,
மனநிலையை மேம்படுத்துதல், மூட்டுகளில் குறைந்த அழுத்தத்தை உருவாக்குதல், எடை அதிகரித்தலை தடுத்தல், புற்றுநோய் ஆபத்தை குறைத்தல் இப்படி பல நன்மைகளை நடைபயிற்சி கொண்டுள்ளது.
நன்மைகள்
ஒருவர் ஒரு நாளைக்கு குறைந்தபட்ச 2,337 அடிகள் நடந்தால், அதாவது 25 நிமிடங்கள் இதய நோய் சம்பந்தமான எந்த பிரச்சனையும் வராது. மேலும், ஒரு நாளைக்கு கிட்டத்தட்ட 6,000 முதல் 10,000 அடிகள் நடந்தால், உடல் ஆரோக்கியத்துடன் இருக்கலாம்.
தினமும் 4,000 அடிகள் நடப்பவர்கள் மரணம் முதல் இதய நோய் பாதிப்பு வரை தள்ளி போடலாம். இளம் வயதில் ஏற்படும் மரணத்தைத் தடுக்க தினமும் 3,967 அடிகள் அதாவது 40 நிமிடங்கள் நடப்பது அவசியம்.
ஒவ்வொரு 1,000 அடிகள் அதிகரிப்பிற்கும் 15 சதவீதம் அளவுக்கு அபாயம் குறைகிறது. 60 வயதிற்கு மேற்பட்டோர் என்றால் தினமும் 6,000 முதல் 10,000 அடிகள் நடப்போருக்கு அதே வயதுடைய நடைபயிற்சி மேற்கொள்ளாதவர்களுடன் ஒப்பிடுகையில் 42 சதவீதம் அபாயம் குறைவாக இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.